Home
Computer

வர்த்தக தேவைகளுக்கான புதிய எச்பி லேப்டாப்!

By Super

வர்த்தக தேவைகளுக்கான புதிய எச்பி லேப்டாப்!
வர்த்தக ரீதியிலான பயன்பாடு கொண்ட லேப்டாப்புகள் சாதாரணமாகவே அதிக விலை கொண்டதாக இருக்கின்றன. வர்த்தக பயன்பாடுகளுக்காக கூடுதல் சாப்ட்வேர்கள் மற்றும் வசதிகளை அந்த லேப்டாப்புகள் கொண்டிருப்பதால் அதிக விலை என்பதை தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

இருப்பினும், கொடுக்கும் பணத்திற்கு உரிய வசதிகள் அந்த லேப்டாப்பில் இருக்கின்றதா என்பதையும் ஆராய வேண்டியிருக்கிறது.

இந்த வகையில் தற்போது எச்பி நிறுவனம் வியாபார பயன்பாடுகளுக்கு ஏற்ற புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. ப்ரோபுக் 4430எஸ் என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய லேப்டாப் வியாபார பயன்பாடுகளை கருத்தில்க்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

14 இஞ்ச் திரையை கொண்டுள்ள இந்த லேப்டாப் வெகு அழகாக பினிஷிங் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆடியோ தரம் அருமையாக இருக்கும். திரையின் மேற்பகுதியில் ஹைடெபினிஷன் தொழில்நுட்பம் கொண்ட வெப் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

இதில், 320 ஜிபி ஹார்டு டிஸ்க்கை கொண்டிருக்கும் இந்த லேப்டாப் 2.2 கிலோ எடையை கொண்டது.

இதன் கீபோர்டில் ரெசிஸ்டன்ட் கொண்டிருப்பதால் தூசிகளால் பாதிக்கப்படாது. விஜிஏ மற்றும் எச்டிஎம்ஐ இணைப்பு போர்ட்டுகள் இதில் இருக்கின்றன. இதில், இரண்டாம் தலைமுறை இன்டெல் ஐ3,ஐ5 மற்றும் ஐ7 பிராசஸர்களை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

இந்த புதிய எச்பி லேப்டாப் ரூ.30,000 விலையில் இருக்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X