Home
Computer

புதிய வர்த்தக டேப்லெட்டை தயாரிக்கும் எச்பி

By Karthikeyan
புதிய வர்த்தக டேப்லெட்டை தயாரிக்கும் எச்பி

எச்பி நிறுவனம் ஒரு புதிய திட்டத்துடன் களமிறங்க இருக்கிறது. அந்த திட்டம் என்னவென்றால் அந்நிறுவனம் ஒரு புதிய விண்டோஸ் 8 வர்த்தக டேப்லெட்டை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு எச்பி ஸ்லேட் 8 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த டேப்லெட் வர்த்தக பயன்பாட்டிற்காகவே தயாரிக்கப்பட இருக்கிறது. இந்த டேப்லெட் ஐபேடை விட மிக மெல்லியாதாக இருக்கும்.

தயாரிப்பு நிலையில் இருக்கும் இந்த எச்பி ஸ்லேட்டின் ஒரு சில தொழில் நுட்பங்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றின்படி இந்த டேப்லெட் 10.1 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இது விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும். இதில் டிஜிட்ட்ல பின் இன்புட் மற்றும் அவுட் டோர் வியூவிங் வசதியும் உள்ளது. இதன் எடை .68 கிலோ மட்டுமே. மேலும் இதன் பேட்டரியைன் இயங்கு நேரம் 8 முதல் 10 மணி நேரம் ஆகும்.

இந்த டேப்லெட் டெஸ்க்டாப் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும் மற்றும் அவற்றை இயக்கும் சக்தி கொண்டது. குறிப்பாக இது வர்த்தக பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்டாலும் இதை சாதாரண பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம். மேலும் இந்த டேப்லெட் பாதுகாப்பு டூல் சாப்ட்வேரைக் கொண்டிருப்பதால் இது சூப்பரான பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது.

இந்த எச்பி ஸ்லேட் டேப்லெட் எப்போது விற்பனைக்கு வரும் என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை. அதுபோல் இதன் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இளசுகளையும், வர்த்தக ஜம்பாவான்களையும் இந்த டேப்லெட் கண்டிப்பாக கவரும் என்று நம்பப்படுகிறது. அதுபோல் இந்த டேப்லெட் ஐபேடுக்கு மாற்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொருத்திருந்து பார்ப்போம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X