Home
Computer

புதிய டேப்லெட்டை களமிறக்கும் எச்பி!

By Karthikeyan
புதிய டேப்லெட்டை களமிறக்கும் எச்பி!

கடந்த வருடன் எச்பி மிகக் குறைந்த டிவைஸ்களையே அறிமுகப்படுத்தி இருந்தது. ஆனால் இந்த வருடம் எச்பி அதிகமான டிவைஸ்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த புத்தாண்டின் தொடக்கத்திலேயே எச்பி பெவிலியன் டிஎம் 1-4003 எயு என்ற புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது.

இந்த எச்பி பெவிலியன் டிஎம் 1-4003 எயு லேப்டாப்பின் முக்கிய அம்சங்களாகப் பார்த்தால் இது 11.6 இன்ச் அளவில் எச்பி ப்ரைட் வியூவ் எச்டி எல்இடி டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளேயின் பிக்சல் ரிசலூசன் 1366 X 768 ஆகும்.

இந்த பெவிலியன் லேப்டாப் 320 ஜிபி சட்டா ஹார்ட் டிஸ்கையும் எச்பி ட்ரூ விஷன் எச்டியையும் கொண்டிருக்கிறது. இதன் இயங்கு தளம் விண்டோஸ் 7 ஹோம் பேசிக் 64 பிட் ஆகும். அதுபோல் இந்த லேப்டாப் 1.65 ஜிஹெர்ட்ஸ் எஎம்டி டூவல் கோர் ப்ராசஸரையும் அதே நேரத்தில் எஎம்டி ரேடியோன் எச்டி 6320 க்ராபிக்ஸ் கார்டையும் கொண்டுள்ளது. மேலும் இதன் ரேம் 2ஜிபி டிடிஆர்3யைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த எச்பி பெவிலியன் லேப்டாப் மல்டி பார்மட் டிஜிட்டல் மீடியா கார்டு ரீடர், எச்பி ட்ரூ விஷன் எச்டி வெப்காம், ஆர்ஜே-45, எர்த்நெட் லேன், மைக்ரோபன் இன் மற்றும் அவுட், வயர்லஸ் 802.11 எ/பி/ஜி/என், ப்ளூடூத், விஜிஎ, எச்டிஎம்ஐ போன்ற ஏராளமான வசதிகளையும் இந்த லேப்டாப் கொண்டிருக்கிறது.

அதோடு இந்த லேப்டாப்பில் 65 வாட்ஸ் கொண்ட ஏசி பவர் அடாப்டர் உள்ளது. மின் திறனிற்காக இந்த லேப்டாப் 6 செல் கொண்ட லையன் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இதன் மொத்தப் பரப்பைப் பார்த்தால் அது 215 x 292 x 32 மிமீ ஆகும்.

இந்த டேப்லெட்டின் விலை ரூ.25,000ல் இருக்கும் என்று தெரிகிறது. மேலும் இது விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X