சும்மா நச்சுன்னு ஒரு எச்பி ஸ்லிம் கம்ப்யூட்டர்

By Super
|

சும்மா நச்சுன்னு ஒரு எச்பி ஸ்லிம் கம்ப்யூட்டர்
மார்க்கெட்டில் ஸ்லிம் வரிசை கம்ப்யூட்டர்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இடத்தை அடைக்காது என்பதோடு மிகவும் செக்ஸியாக இருப்பதால் ஸ்லிம் கம்ப்யூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிக வரவேற்பு கொடுக்கின்றனர்.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தயாரிப்பை வழங்குவதுதான் வியாபார தந்திரம் மட்டுமல்ல, சிறந்த நிறுவனத்துக்கு அழகு என்பதை புரிந்துகொண்டு புதிய ஸ்லிம் கம்ப்யூட்டர்களை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

தோற்றத்தில்தான் ஸ்லிம்மாக இருக்கிறது. ஆனால், 1 டிபி சேமிப்பு திறனை கொண்ட கம்ப்யூட்டராக வந்துள்ளது. இதில், 2.9 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஐ5 டியூவல் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில், ஏஎம்டி ஹைடெபினிஷன் கிராபிக்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டிருக்கிறது.

இதில்,நான்கு 2.0 யுஎஸ்பி போர்ட்டுகளும், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன. வீடியோ கனெக்ட்டிங் போர்ட், எஸ்டி, எஸ்டிஎச்சி மற்றும் எம்எம்சி கார்டுகளுக்கான கம்பாட்டிபிள் கார்டு ரீடரும், இன்பில்ட் டிவி டியூனரும் கொடுக்கப்பட்டுள்ளது.

வைஃபை இன்டர்நெட் இணைப்பு வசதியும் இருக்கிறது. அனைத்து அம்சங்களுடன் வந்துள்ள இந்த புதிய எச்பி டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர் ரூ.35,000 விலையில் கிடைக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X