Home
Computer

ரூ.30,000 விலையில் 8 போர்ட்டுகளுடன் வரும் புதிய எச்பி கம்ப்யூட்டர்

By Super

ரூ.30,000 விலையில் 8 போர்ட்டுகளுடன் வரும் புதிய எச்பி கம்ப்யூட்டர்
எச்பி நிறுவனம் புதிய மாடல்களில் லேப்டாப்பையும் மற்றும் மேசை கணினியையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தனது புதிய தயாரிப்புகளை உயர்தரத்தில் வழங்குகிறது எச்பி நிறுவனம். அதனால் தான் அந்நிறுவனம் வெற்றி நடை போட்டு வருகிறது.

எச்பி பெவிலியன் பி7-1126 மேசை கணினி மிகவும் மலிவு விலையில் இல்லாமல் நடுத்தர விலையில் வருகிறது. இந்த கணினியை வீட்டில் இருப்பவர்களும், வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் தாராளமாக பயன்படுத்தலாம்.

இந்த மேசை கணினியின் டிசைனைப் பார்த்தால் அது க்ளாசி கருப்பு உறைகளுடன் கருப்பு அலுமினியம் சேசிஸ் கொண்டு வருகிறது. மேலும் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது.

எச்பி பெவிலியன் பி7-1126 மேசை கணினியின் பரப்பளவைப் பார்த்தால் அது 15.28 x 6.89 x 16.14 இன்ச்சுகளாகும். இதன் முன்புறம் 2 யுஎஸ்பி போர்ட்டுகளும் மற்றும் ஆடியோ ஜாக்கும் உள்ளன. கார்டு துவாரத்தோடு டிவிடி-ஆர்டபிள்யூ டிரைவும் இதன் முன்புறம் உள்ளது.

இந்த மேசை கணினியின் பின்புறம் 4 யுஎஸ்பி 2.0 போர்ட்டுகளும் மற்றும் 2 யுஎஸ்பி 3.0 போர்ட்டுகளும் உள்ளன. ஆக மொத்தம் 8 யுஎஸ்பி போர்ட்டுகள் கொண்டு வருகிறது இந்த கணினி. மேலும் எர்த் நெட்டுடன் மைக்ரோபோன் ஜாக் மற்றும் ஆடியோ ஜாக் ஆகியவையும் கொண்டு வருகிறது. இதன் அடுத்த சிறப்பு என்னவென்றால் இது வைபை 802.11என் கொண்டு வருவதால் மிக எளிதாக வயர்லஸ் இண்டர்நெட்டைப் பயன்படுத்த முடியும்.

இந்த பெவிலியன் கணினி எஎம்டி க்வாட்-கோர் எ8-3800 அக்ஸலரேட்டட் ப்ராசஸர் கொண்டு வருகிறது. இதன் கடிகார வேகம் 2.4 ஜிஹெர்ட்ஸ் ஆகும். இதன் ஹார்ட் டிஸ்க் 1டிபி ஆகும். இது ஒரு நிமிடத்திற்கு 7200 ரிவலூசனில் சுற்றுகிறது. மேலும் இந்த கணினியின் ரேம் 6ஜிபி ஆகும். அதனால் இதில் ஏராளமான பாடல்கள் மற்றும் வீடியோக்களை சேகரித்து வைக்க முடியும்.

க்ராபிக்ஸ் வசதிக்காக இந்த கணினி எஎம்டி ரேடியோன்டிஎம் எச்டி 6550டிX11 க்ராபிக்ஸ் கார்டு கொண்டு வருகிறது. இதன் 6ஜிபி ரேமோடு திறன் வாய்ந்த க்ராபிக்ஸ் கார்டுகளையும் இந்த கணினி வழங்குவதால் இதில் வீடியோ கேம் விளையாடுவது மிக அருமையாக இருக்கும்.

இந்த பெவிலியன் கணினியன் ஹார்ட் ட்ரைவ் ஸியா மியூசிக், இ ரீடர் மற்றும் ரோக்ஸியோ மீடியா ப்ளேயர்கள் போன்றவற்றை வழங்குகிறது. மேலும் இதில் பீட்ஸ் ஆடியோ இருப்பதால் இதில் இருக்கும் ஒலி அமைப்பும் மிக பக்காவாக இருக்கும்.

இந்த பெவிலியன் கணினியோடு பீட்ஸ் ஹெட்போனை இணைத்து பாடல்கள் கேட்டாலோ அல்லது படம் பார்த்தாலோ அது சூப்பராக இருக்கும். இதன் ஆடியோ அவுட்புட் 7.1 சரவுண்ட் சவுண்ட் வசதியை வழங்குகிறது. அதனால் இந்த கணினியை பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த கணினி என்று அழைக்கலாம்.

விலையை எடுத்துக் கொண்டால் எச்பி பெவிலியன் பி7 1126 மேசை கணினி ரூ.30,000ல் வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X