டச்பேடைத் தொடர்ந்து ஓபல் டேப்லெட்டை அறிமுகப்படுத்தும் எச்பி!

எச்பி டச்பேட் வர்த்தகத்தில் ஒரளவு வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து எச்பி நிறுவனம் புதிய கையடக்க டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டின் பெயர் எச்பி ஒபல் ஆகும்.
இந்த ஒபல் லேப்டாப் பல எண்ணற்ற சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதன் இயங்குதளம் வெப் பேஸ்டு இயங்கு தளம் ஆகும். இதன் திரை 7 இன்ச் அளவைக் கொண்டு 1024 x 768 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது.
அடுத்ததாக டூவல் கோர் க்யூவல்காம் எபிக்யு8060 பிராசஸரைக் கொண்டுள்ளது. இந்த பிராசஸரின் கடிகார வேகம் 1.5 ஜிஹெர்ட்ஸ் ஆகும். மேலும் இந்த டேப்லெட் 5 மெகா பிக்சல் பின்புற கேமராவையும் 3ஜி ரேடியோவையும் கொண்டுள்ளது.
இந்த புதிய ஒபல் டேப்லெட் ஏறக்குறைய எச்பி டச்பேடின் டிசைனை ஒத்திருக்கிறது. இந்த டேப்லெட்டின் பின் புறம் கருப்பு நிறத்தில் இருக்கிறது. அதன் மத்தியில் எச்பியின் முத்திரை இருக்கும். மேலும் இதன் ஸ்பீக்கர்கள் பக்கவாட்டில் இல்லாமல் இந்த டேப்லெட்டின் பின்புறம் இருக்கின்றன.
இந்த ஒபல் டேப்லெட்டின் திரை மிக பக்காவாக பளிச்சென்று இருக்கிறது. இந்த திரையைத் தூரத்திலிருந்து பார்த்தாலும் மிகத் தெளிவாகத் தெரியும் அளவிற்கு இதன் பிக்சல் ரிசலூசன் உள்ளது.
தொழில் நுட்ப ரீதியாகப் பார்த்தால் இந்த ஒபல் டேப்லெட் தனித்தன்மை வாய்ந்தது. மேலும் இது எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய வல்லது. இந்த டேப்லெட்டின் பீட்ஸ் ஆடியோ உள்ளதால் இதன் ஒலி அமைப்பும் அபாரமாக இருக்கும். இசையும் தேனாக பாயும்.


Click it and Unblock the Notifications