Home
Computer

புத்தாண்டை திரும்பி பார்க்க வைக்கும் எச்பி அல்ட்ராபுக்

By Karthikeyan
புத்தாண்டை திரும்பி பார்க்க வைக்கும் எச்பி அல்ட்ராபுக்

கடந்த 2011ம் ஆண்டை கெட்ஜெட்டுகளின் காலம் என்று அழைக்கலாம். ஏனெனில் கடந்த ஆண்டில் மட்டும் உயர்தர மற்றும் புதுமையான தொழில் நுட்பங்கள் கொண்ட ஏராளமான மொபைல்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்புகள் மற்றும் கணினிகள் ஆகியவை வெளிவந்தன. இவற்றை தயாரித்து அளித்த நிறுவனங்களில் மிக முக்கியமானவை லெனோவா, ஆசஸ் மற்றும் எச்பி போன்ற நிறுவனங்கள் ஆகும்.

ஆனால் இந்த 2012ல் முதலிடத்தைப் பிடிக்க எச்பி நிறுவனம் ஒரு சில புதுமையான கெட்ஜெட்டுகளை களமிறக்க இருக்கிறது. இந்த புத்தாண்டில் லாஸ் வேகாசில் நடைபெறும் நுகர்வோர் மின்னணு பொருட்கள் கண்காட்சியில் அவற்றை அறிமுகப்படுத்துகிறது.

அவற்றில் முக்கியமான ஒன்று எச்பியின் எச்பி ஸ்பெக்ட்ரே அல்ட்ராபுக் ஆகும். இந்த அல்ட்ராபுக்கை மக்கள் ஆர்வமாய் கவனிப்பார்களா என்று உறுதியாகக்க கூறமுடியாது. ஏனெனில் இந்த மின்னணு கண்காட்சியில் ஏராளமான சிறந்த தொழில் நுட்பங்கள் கொண்ட கெட்ஜெட்டுகளும் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் எச்பியின் இந்த ஸ்பெக்ட்ரே அல்ட்ராபுக்கைப் பற்றி பல இடங்களில் அலசல்கள் நடந்திருக்கின்றன. மேலும் இந்த அல்ட்ராபுக்கை எச்பியின் இணையதளத்தில் காட்டியிருக்கிறார்கள். அந்த இணையதள முகவரி http://www.youtube.com/watch?feature=player_embedded&v=pfHK9uvWPMU ஆகும். இந்த வீடியோ 30 வினாடிகள் தொடர்கிறது. இந்த 30 வினாடிகளுக்குள் இந்த அல்ட்ராபுக்கைப் பற்றி முழு விவரமாகப் பார்க்க முடியவில்லை என்றாலும் அதன் டிசைனைப் பார்க்க முடியும்.

ஆனால் எச்பி நிறுவனம் இறுதிவரை இந்த அல்ட்ராபுக்கைப் பற்றிய ரகசியத்தைப் பாதுகாக்காமல் இதை விளம்பரப்படுத்தி இருக்கிறது என்றால் இந்த அல்ட்ராபுக் ஒரு பவர் ஹவுஸ் ஆகும். மேலும் இந்த அல்ட்ராபுக் இன்டலின் ஐவிஒய் ப்ரிட்ஜ் அல்லது இன்டலின் சேன்டி ப்ரிட்ஜைக் கொண்டிருக்கும்.

இப்போது ஏராளமான மக்கள் இந்த அல்ட்ராபுக்கை எதிர்பார்க்கின்றனர். மேலும் இது ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் டேப்லெட்டின் அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் ஒரு சில நிறுவனங்கள் தங்களது தனித்துவமிக்க தொழில் நுட்பத்தினால் பெரிய வெற்றியைப் பெற்றன. இந்த புதிய ஆண்டில் எச்பி வெற்றி பெறும் என்பது ஆண்டு தொடக்கத்திலேயே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X