இந்தியா: ஹெச்பி நிறுவனத்தின் அசத்தலான ENVY x360 லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?
அதன்பின்னர் 12.5 மணி நேரம் தாங்க கூடிய பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் டெல், சோனி, லெனோவோ போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக ஹெச்பி நிறுவனம் தொடர்ந்து புதிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அந்த வகையில்
இன்று புதிய ENVY x360 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது ஹெச்பி நிறுவனம்.
குறிப்பாக இந்த ஹெச்பி ENVY x360 லேப்டாப் மாடல் யுஆனு சுலணநn செயலியை அடிப்படையாக கொண்டு இயங்கும் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

ஹெச்பி ENVY x360 லேப்டாப் :
ஹெச்பி ENVY x360 லேப்டாப் மாடல் பொதுவாக 13.3-இன்ச் எப்எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த லேப்டாப் விளிம்ல் மைக்ரோ எட்ஜ்-டூ-எட்ஜ் மற்றும் பெசல்-லெஸ் அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும்.

புதிய அம்சம்:
பின்பு திரைப்படம், மியூசிக் மற்றும் கேமிங்கிற்கான ஸ்ட்ரீமிங் போன்ற பயன்பாடுகளுக்கு தகுந்தபடி வேகமான இணை இணைப்புகளை வழங்க Gigabit Wi-Fi என்ற அம்சம் இந்த லேப்டாப் மாடலில் பொறுத்தப்பட்டுள்ளது.

சேமிப்பு:
குறிப்பாக 4ஜிபி அல்லது 8ஜிபிDDR4-2400 ரேம் வசதி மற்றும் 128ஜிபி மற்றும் 256ஜிபி M.2 SSD உள்ளடக்க மெமரி வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு விண்டோஸ் 10 ஹோம் (64 பிட்) இயங்குதள ஆதரவுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவரும்.

பேட்டரி:
மேலும் சத்தம் குறைப்பு, நெடுநேர பயன்பாட்டின் போது ஏற்படும் வெப்பநிலையை கட்டுப்படுத்து கூல்சென்ஸ் தொழில்நுட்பம் என பல அம்சங்கள் இவற்றுள் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 12.5 மணி நேரம் தாங்க கூடிய பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
குறிப்பாக %0 பேட்டரி ஆயுள் சக்தியில் இருந்து 50% வரையிலான சார்ஜிங்கிற்கு வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.60,990-ஆக உள்ளது.
மேலும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த லேப்டாப் மாடல் விற்பனைக்கு வெளிவரும்.


Click it and Unblock the Notifications