Home
Computer

அட்டகாசமான லேப்டாப்புகளை களமிறக்கும் எச்பி!

By Karthikeyan
அட்டகாசமான லேப்டாப்புகளை களமிறக்கும் எச்பி!

எச்பி நிறுவனம் சமீபத்தில் மிக மெல்லிய மற்றும் குறைந்த எடையில் 4 புதிய லேப்டாப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த லேப்டாப்புகள் எச்பியின் என்வி அல்ட்ராபுக் மற்றும் என்வி ஸ்லீக்புக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.

இந்த 4 லேப்டாப்புகளும் சூப்பரான நவீன் தொழில் நுட்பங்களுடன் வருகின்றன. அதாவது இந்த லேப்டாப்புகள், இன்டல் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்கள், யுஎஸ்பி 3.0 இணைப்பு, இமேஜ் பேடுகள் மற்றும் எச்பியின் நவீன் டச் பேடுகள் ஆகியவற்றுடன் வருகின்றன.

இந்த லேப்டாப்புகள் மிகவும் உறுதியானவை அதே நேரத்தில் இவற்றின் செயல்திறனும் பக்காவாக இருக்கும். அல்ட்ராபுக் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் புதிய லேப்டாப்புகள் எச்பி என்வி அல்ட்ராபுக் மற்றும் எச்பி என்வி 6 அல்ட்ராபுக் என்று அழைக்கப்படுகின்றன. 4 அல்ட்ராபுக் 14 இன்ச் அளவிலும் 6 அல்ட்ராபுக் 15.6 இன்ச் அளவிலும் வருகின்றன. இவற்றின் விலை ரூ.57.990 முதல் தொடங்குகின்றன.

இந்த இரண்டு புதிய அல்ட்ராபுக்குகளும் 8 முதல் 9 மணி நேர இயங்கு நேரத்தைக் கொண்டிருக்கின்றன. மேலும் இவை கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் வருகின்றன. அதோடு இந்த அல்ட்ராபுக்குகள் 32ஜிபி எஸ்எஸ்டி கார்டையும் வழங்குகின்றன.

அதே நேரத்தில் புதிய எச்பி என்வி ஸ்லீக்புக்குகள் எச்பி என்வி 4 ஸ்லீக்புக் மற்றும் எச்பி என்வி 6 ஸ்லீக்புக் என்று அழைக்கப்படுகின்றன. என்வி 4 ஸ்லீக்புக் 14 இன்ச் அளவிலும் என்வி 6 ஸ்லீக்புக் 15.6 இன்ச் அளவிலும் வருகின்றன. இவற்றின் விலை ரூ.41,990லிருந்து தொடங்குகின்றன. இந்த புதிய ஸ்லீக்புக்குகளும் 8 முதல் 9 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகின்றன.

எச்பியின் இந்த 4 லேப்டாப்புகளும் இன்டல் எச்டி க்ராபிக்சை கொண்டிருக்கின்றன. அதோடு இவை 2ஜிபி எஎம்டி ரேடியோன் 7670எம் கார்டையும் வழங்குகின்றன. இந்த 4 லேப்டாப்புகளும் இந்திய ரசிகர்களை பெரிதாகக் கவரும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X