பிஸினஸுக்கு தகுந்த வகையில் எச்பி லேப்டாப்!

By Super
|

பிஸினஸுக்கு தகுந்த வகையில் எச்பி லேப்டாப்!
எலைட் 2170-பி என்ற புதிய டேப்டாபினை வழங்குகிறது எச்பி நிறுவனம். லேப்டாப் வடிவிலான எலைட் 2170-பி அல்ட்ரா நோட்புக் உயர்ந்த தொழில் நுட்பங்களை வழங்கும். ஆனால் இது கொஞ்சம் காஸ்ட்லி தான்.

1.31 கிலோ கிராம் எடை கொண்ட இந்த லேப்டாப் 11.6 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். சிறப்பான திரை வசதியின் மூலம் தெளிவாக காட்சிகளை பார்க்கலாம். திரை அளவை விடவும் அதன் துல்லியம் பற்றிய விவரம் மிக முக்கியமான ஒன்று. இந்த 11.6 இஞ்ச் திரை வசதி 1366 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும்.

இந்த லேப்டாப்பில் பேட்டரி லாக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சில எலக்ட்ரானிக் சாதனங்களில் சார்ஜ் செய்தாலும் கொஞ்ச நேரத்தில் குறைந்துவிடும். இதில் உள்ள பேட்டரி லாக் மூலம், இது போல் பேட்டரி லீக்காகாமல் பார்த்து கொள்ளலாம்.

அது மட்டும் அல்லாமல் இந்த பேட்டரி ஷாக் ப்ரொடெக்ஷன் கொண்டதாக இருக்கும். இதன் பேட்டரி 8 மணி நேரம் தொடர்ந்து சப்போர்ட் செய்யும். விண்டோஸ்-7 ப்ரொஃபஷனல் 32 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த லேப்டாப், இன்டெல் அல்ட்ரா லோ ஐவி ப்ரிட்ஜ் பிராசஸரினை கொண்டது.

இந்த லேப்டாப் ஐ3, ஐ5 மற்றும் ஐ7 என்று மூன்று விதமான பிராசஸரில் கிடைக்கும். கிராஃபிக்ஸ் சிப்செட் போன்ற சிறந்த தொழில் நுட்ப வசதியினையும் பெறாம். பிசினஸ் போன்ற பயன்பாட்டிற்காக லேப்டாப் தேடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த எச்பி எலைட் 2170-பி லேப்டாப்

சிறந்ததாக இருக்கும் என்று கூறலாம். எச்பி எலைட் 2170-பி லேப்டாப்பினை ரூ. 69,000 விலையில் பெறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X