Home
Computer

செயல்திறன் மிக்க புதிய லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தியது எச்பி

By Super
செயல்திறன் மிக்க புதிய லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தியது எச்பி
எச்பி நிறுவனம் புதிய பெவிலியன் டிஎம்4 லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த லேப்டாப்புகள் எடுத்துச் செல்வதற்கு எளிதாக குறைந்த எடையுடனும் அதே நேரத்தில் மலிவு விலையிலும் இருக்கின்றன. இவற்றின் எடை 4.5 பவுண்டுகளாகும். இவை மெல்லியதாக இருக்கின்றன. ஆனால் இதன் செயல் திறன் மிக அபாரமாக உள்ளன.

புதிய பெவிலியன் டிஎம்4 லேப்டாப் 14 இன்ச் எல்இடி டிஸ்ப்ளேயுடன் வருவதால் இதில் வீடியோ பார்ப்பது சிறந்த அனுபவத்தைத் தரும். அதே நேரத்தில் இது இன்டல் எச்டி 3000 க்ராபிக்சும் கொண்டுள்ளது. இதன் எச்டி போர்ட் வழியாக நமது எச்டி டிவியுடன் இணைத்து தெளிவான படங்களைப் பார்க்க முடியும்.

புதிய பெவிலியன் டிஎம்4 லேப்டாப்பின் அடுத்த சிறப்பைப் பார்த்தால் அது எச்பி வசதியுடன் 6ஜிபி டிடிஆர்3 மெமரியுடன் இன்டல் கோர் ஐ5-2410எம் 2.3ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் கொண்டுள்ளது. மேலும் இதன் ஹார்ட் டிஸ்க் 640ஜிபி ஆகும். அதனால் இதில் ஏராளமான தரவுகளை நாம் சேமிக்க முடியும்.

புதிய பெவிலியன் டிஎம்4 லேப்டாப்பின் பேட்டரி 7 மணி நேரம் வரை தாங்கும் திறனைக் கொண்டுது.

புதிய பெவிலியன் டிஎம்4 லேப்டாப் கைரேகை அறியும் திறனும் கொண்டுள்ளது. அதனால் இதில் பாதுகாப்பு வசதி அதிகம். நமது கைரேகைகளை பதிவு செய்துவிட்டால் போதும் பின் நமது கைகள் லேப்டாப்பின் பாஸ்வேர்டாக மாறிவிடும். அதனால் அடுத்தவர் யாரும் நமது லேப்டாப்பை நமக்குத் தெரியாமல் பயன்படுத்த முடியாது.

புதிய பெவிலியன் டிஎம்4 லேப்டாப்பில் பொழுதுபோக்கு அம்சங்களும் குறைவில்லாமல் இருக்கின்றன. அதாவது இது எலக்ட்ரானிக் மீடியா ரீடர் கொண்டிருப்பதால் இதன் மூலம் தகவல்களை கேமராவுக்கோ அல்லது எம்பி3 மற்றும் எஸ்டி கார்டுக்கு பரிமாற்றம் செய்ய முடியும்.

புதிய பெவிலியன் டிஎம்4 லேப்டாப் எச்பி மீடியா ஸ்மார்ட் கொண்டிருப்பதால் இதில் மல்டி மீடியா அனுபவம் மிகச் சிறப்பாக இருக்கும். இதன் எச்பி குய்க்வெப் மூலம் எளிதாக பயனுள்ள இணைய முகவரிகளை பார்க்கலாம். மேலும் இதன் எச்பி ப்ரோடொக்ட் ஸ்மார்ட் தகவல்களை இழப்பதிலிருந்து ஹார்ட் டிஸ்கை காக்கிறது.

புதிய பெவிலியன் டிஎம்4 லேப்டாப்பின் அலுமினியம் மற்றும் இரும்பு கலந்த இதன் கீபோர்டு மிக அழகாக வரிசையாக உள்ளன. இந்த புதிய லேப்டாப்புகள் ரூ.46800லிருந்து கிடைக்கிறது. இதை ஒரு திறன் கொண்ட பொழுதுபோக்கு அம்சம் கொண்ட லேப்டப் என்று எச்பி விளம்பரப்படுத்துகிறது. இதை நாமும் மறுப்பதற்கு இல்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X