Home
Computer

ரூ.75,000 விலையில் புதிய எச்பி அல்ட்ராபுக்!

By Super

ரூ.75,000 விலையில் புதிய எச்பி அல்ட்ராபுக்!
எச்பி நிறுவனம் கணினி வர்த்தகத்தில் நெடுங்காலமாக கோலோய்ச்சி வருகிறது. ஏராளமான போட்டியாளர்கள் வந்த போதிலும் தனது தரமான தயாரிப்புகளால் இன்னும் வெற்றிக் கொடி நாட்டி வருகிறது. மேலும் பெரும்பாலான மக்கள் மனங்களில் சிம்மாசனம் இட்டு இருக்கிறது. இப்போது எச்பி நிறுவனம் எச்பி போலியோ 13-1008டியு என்ற அல்ட்ராபுக்கை அறிமுகப்படுத்துகிறது.

இந்த போலியா ஒரு நடுத்தர அல்ட்ராபுக் ஆகும். இந்த டிவைஸ் இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸருடன் 4ஜிபி ரேம் தாங்கி வருகிறது. மற்ற அல்ட்ராபுக்குகளைவிட இது சற்று குறைந்த வசதி கொண்ட அல்ட்ராபுக் ஆகும்.

இந்த போலியோ அல்ட்ராபுக் 4ஜிபி ரேமுடன் 1.6 ஜிஹெர்ட்ஸ் இன்டெல் கோர் 2ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது. கிராபிக்ஸ் வேலைகளுக்காக இன்டெல் எச்டி கிராபிகஸ் இதில் உண்டு. இதன் இயங்கு தளம் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் ஆகும்.

இதன் திரை 13.3 இன்ச் அளவு கொண்டு 1366 x 768 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. மேலும் இந்த திரை பிரைட் வியூவ் எல்இடி க்ளோஸ் தொழில்நுட்பத்தை கொண்டது. அடுத்ததாக இந்த அல்ட்ராபுக் 128ஜிபி சாலிட் ஸ்டேட் டிரைவையும் கொண்டுள்ளது.

இந்த போலியோ அல்ட்ராபுக்கின் தடிமன் 18 மிமீ ஆகும். இதன் எடை 1.5 கிலோ மட்டுமே அதனால் இதை எளிதாக எடுத்துச் செல்ல முடியும். தரமான ஒலி அமைப்பிற்காக இந்த அல்ட்ராபுக் பில்ட்இன் அல்டெக் லேன்சிங் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

இணைப்பு வசதிகளுக்காக ஜிகாபிட் எர்த்நெட் போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 3.0/2.0 போர்ட் மற்றும் 802.11 பி/ஜி/என் வைஃபை இணைப்பையும் இந்த அல்ட்ராபுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த அல்டராபுக் மிக உறுதியாகவும் அதே நேரத்தில் தொடுவதற்கு மிக மென்மையாகவும் இருக்கிறது. இதன் டிசைன் மிக ஸ்டைலாக இருக்கிறது. மேலும் இதன் டச்பேட் மிக மிருதுவாக இருக்கிறது.

இந்த போலியோ அல்ட்ராபுக்கின் குறைகளாகப் பார்த்தால் அவை குறைவான மெமரி சேமிப்பு, குறைந்த எண்ணிக்கையிலான யுஎஸ்பி போர்ட்டுகள் மற்றும் குறைந்த ஜிபியு மெமரியைக் கொண்டுள்ளது.

ஆனால் இதன் செயல் திறைனைப் பார்க்கும் போது இதன் குறைபாடுகள் பெரிதாகத் தெரியாது. இதன் வேகம் மிக அதிகமாக இல்லை என்றாலும் அதற்கா மிக மெதுவாகவும் இல்லை. அதனால் வேலைகளை மிக அழகாக செய்ய முடியும். இந்த புதிய அல்ட்ராபுக் போலியோ 13 வரிசையி்ல் வருகிறது.

இந்த அல்ட்ராபுக்கில் இருக்கும் இன்டெல் எச்டி கிராபிக்ஸ் 3000 கிராபிக்ஸ் ஆக்ஸிலரேட்டர் கார்டு மிக அதிக வசதியைக் கொண்டிருக்கவில்லை. அதனால் ஒருசில புதிய வீடியோ கேம்களை இந்த அல்ட்ராபுக்கில் விளையாடுவது கடினம். இந்த அல்ட்ராபுக் ரூ.75,000க்கும் கூடுதலான விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X