Home
Computer

தமது அல்ட்ராபுக்குகளின் விற்பனையை அதிகரிக்க திட்டமிடும் எச்பி

By Karthikeyan
தமது அல்ட்ராபுக்குகளின் விற்பனையை அதிகரிக்க திட்டமிடும் எச்பி

இந்திய லேப்டாப் சந்தையில் எச்பியின் பங்களிப்பு அதிகம். அந்த நிறுவனம் பல சூப்பரான லேப்டாப்புகள், நோட்புக்குள் மற்றும் அல்ட்ராபுக்குகளை இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது. எச்பியின் சாதனங்களும் கணிசமான அளவில் விற்பனையாகி வருகின்றன.

இந்த நிலையில் தமது மொத்த நோட்புக் பிசி விற்பனையில் 15 முதல் 20 சதவீத விற்பனையை வரும் 2013ன் இறுதிக்குள் தமது அல்ட்ராபுக்குகள் பெற்று தரும் எச்பி எதிர்பார்க்கிறது. தற்போது எச்பியின் விற்பனையில் அவற்றின் அல்ட்ராபுக்குள் மட்டும் 10 சதவீத விற்பனையைத் தருகின்றன.

எனவே 2013ன் இறுதிக்குள் எச்பி அல்ட்ராபுக்குகளின் விற்பனை 20 சதவீதத்தையும், 2014ற்குள் 40 சதவீத விற்பனையையும் எட்டும் என்று எதிர்பார்ப்பதாக எச்பி இந்தியாவின் பொது மேலாளர் ராஜீவ் திருவஸ்தவா கூறியிருக்கிறார்.

தற்போது வரும் எச்பியின் அல்ட்ராபுக்குள் பல புதிய நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன. மேலும் ரூ.50,000க்கும் குறைவான விலையிலிருந்து ரூ.1.00,000ற்கும் அதிகமான விலையில் அவற்றில் இருக்கும் தொழில் நுட்ப வசதிகளுக்கு ஏற்ப விற்பனையாகின்றன. அதோடு டெல், எச்சிஎல், தோஷிபா போன்ற நிறுவனங்களும் தங்கள் அல்ட்ராபுக்குளை விற்பனை செய்து வருகின்றன.

இந்த நிலையில் எச்பி இந்தியாவின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பது மிக விரைவில் தெரிந்துவிடும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X