எக்கச்சக்க சாப்ட்வேர்களுடன் வரும் எச்பி என்வி ஸ்பெக்டர் எக்ஸ்டி அல்ட்ராபுக்

Posted By: Karthikeyan
எக்கச்சக்க சாப்ட்வேர்களுடன் வரும் எச்பி என்வி ஸ்பெக்டர் எக்ஸ்டி அல்ட்ராபுக்

இந்திய கணினி சந்தையில் மீண்டும் ஒரு புதிய லேப்டாப்பைக் களமிறக்கி இருக்கிறது எச்பி நிறுவனம். அல்ட்ரா மொபைல் பிரீமியம் அல்ட்ராபுக் வரிசையில் வரும் இந்த லேப்டாப்பிற்கு எச்பி என்வி ஸ்பெக்டர் எக்ஸ்டி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மேலும் இந்த அல்ட்ராபுக் ரூ.64,990க்கு விற்கப்பட இருக்கிறது.

பார்ப்பதற்கு பந்தாவாக இருக்கும் இந்த புதிய லேப்டாப் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. தரமான உலோகத்தால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த லேப்டாப் ஆப்சனல் பேக்லிட் கீபோர்ட் வசதியையும் வழங்குகிறது.

இந்த என்வி லேப்டாப் 256ஜிபி சாலிட் ஸ்டேட் சேமிப்பை வழங்குவதால் இதில் ஏராளமான தரவுகளை சேமித்து வைக்க முடியும். இதன் பேட்டரி இந்த லேப்டாப்பிற்கு 8 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இந்த லேப்டாப்பில் அல்ட்ராபாஸ்ட் எம்சட்டா சாலிட் ஸ்டேட் ட்ரைவ் மற்றும் இன்டல் ரேபிட் ஸ்டார்ட் தொழில் நுட்பம் உள்ளதால் இது தாறுமாறான வேகத்தில் இயங்கும். அதோடு இதன் பூட்டிங்கும் மிக வேகமாக இருக்கும்.

நவீன இன்டல் கோர் ப்ராசஸர்களில் வரும் இந்த லேப்டாப், இன்டல் ஸ்மார்ட் கனக்ட் தொழில் நுட்பம் இருப்பதால் இந்த லேப்டாப் ஸ்லீப் மோடில் இருந்தாலும் இமெயில்கள் தானாகவே அப்டேட் ஆகிக் கொண்டிருக்கும்.

மேலும் இந்த லேப்ட்பில் பீட்ஸ் ஆடியோ மற்றும் 4 ஸ்பீக்கர்கள் உள்ளதால் இந்த அல்ட்ராபுக்கில் சூப்பரான பாடல்களையும் கேட்கலாம். அதோடு இதில் எச்பி கூல்சென்ஸ் தொழில் நுட்பம் உள்ளதால் இந்த லேப்டாப் எளிதாக சூடாகாது.

இந்த லேப்டாப் எச்டிஎம்ஐ, எர்த்நெட் மற்றும் யுஎஸ்பி போர்ட்டுகளுடன் வருகின்றது. மேலும் அடோப் போட்டோசாப் எலமன்ட்ஸ் 10 மற்றும் அடோப் பிரீமியர் எலமன்ட்ஸ் 10 போன் சாப்ட்வேர்களும் இந்த லேப்டாப்பில் உள்ளன.

மேலும் 2 வருட உத்திரவாதத்துடன் கூடிய நோர்ட்டன் இன்டர்நெட் செக்யூரிட்டி மற்றும் இன்டல் ஐடென்டிட்டி ப்ரொடெக்சன் சாப்ட்வேர் போன்றவையும் இதில் உள்ளதால் இந்த லேப்டாப் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்