Home
Computer

லேப்டாப் நிறுவனங்களுக்கு கடும் போட்டி கொடுக்கும் எச்பி!

By Karthikeyan
லேப்டாப் நிறுவனங்களுக்கு கடும் போட்டி கொடுக்கும் எச்பி!

மிக உயர்தரம் வாய்ந்த லேப்டாப்புகள் சந்தைக்கு வருவது இப்போது வழக்கமாகிவிட்டது. ஆசஸ், எச்பி மற்றும் லெனோவா நிறுவனங்கள் முதலிடத்தைப் பெற இப்போது போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போதைய இந்திய சந்தையில் ஆசஸ் எக்ஸ் வரிசை லேப்டாப்புகள் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளன. அவற்றோடு எச்பி நிறுவனமும் தனது என்வி வரிசை லேப்டாப்புகளுடன் போட்டி போட களமிறங்குகிறது.

குறிப்பாக எச்பி நிறுவனம் தனது புதிய படைப்பான எச்பி என்வி டிஎம்4 லேப்டாப்பின் மீது உயர்வான நம்பிக்கையை வைத்திருக்கிறது. இந்த புதிய லேப்டாப்பின் பரப்பு 33.8 x 22.5 x 3.24 செமீ ஆகும். இதன் எடை 1.97 கிலோ ஆகும்.

இந்த என்வி லேப்டாப் இன்டல் எச்எம்67 சிப்செட்டைக் கொண்டுள்ளது. மேலும் இது 6 ஜிபி டிடிஆர் ரேன்டம் அக்சஸ் மெமரியுடன் கோர் ஐ5 இன்டல் ப்ராசஸரை வழங்குகிறது. க்ராபிக்ஸ் வேலைகளுக்காக இந்த என்வி லேப்டாப் 1ஜிபி எஎம்டி ரேடியோன் எச்டி க்ராபிக்ஸ் யுனிட்டைக் கொண்டிருக்கிறது.

இந்த என்வி லேப்டாப் 14 இன்ச் அளவில் எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளே கொண்டு அது 1366 x 768 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. இதன் இயங்கு தளம் விண்டோஸ் 7 பிரிமியம் 64 பிட் ஆகும். மற்ற வசதிகளைப் பார்க்கும் போது இந்த லேப்டாப் எச்பி ட்ரூவிஷன் உயர் டெபினிசன் வெப்காமைக் கொண்டுள்ளது. அடுத்ததாக இதில் இன்டக்ரேட்டட் மைக்ரோபோனும் அடங்கியுள்ளது. அதுபோல் இந்த லேப்டாப் மல்டிபுள் பார்மட்டுகளை சப்போர்ட் செய்யக்கூடிய டிஜிட்டல் மீடியா கார்டு ரீடரையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த லேப்டாப் சூப்பர் மல்டி டிவிடி +/- ஆர்/ஆர்டபுள்யு, ஆர்ஜே 45 மற்றும் விஜிஎ போர்ட்டுகள், ஜிகாபிட் எர்த்நெட் லேன் போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட் மற்றும் 2 யுஎஸ்பி 3.0 போர்ட்டுகள், எச்டிஎம்ஐ போர்ட், வைபை இன்டர்நெட் இணைப்பு, அதி வேகம் கொண்ட ப்ளூடூத் இணைப்பு, ஸ்டேண்டர்ட் மைக்ரோபோன் இன், ஹெட்போன் ஜாக், கென்சிங்டன் மைக்ரோ சேவர் லாக் ஸ்லாட் மற்றும் பவர் ஆன் பாஸ்வேர்ட் போன்ற எல்லா வசதிகளையும் இந்த லேப்டாப் வழங்குகிறது. அதுபோல் இதில் 90 வாட் எசி பவர் ஆடாப்டரும் உள்ளது.

இந்த லேப்டாப் ட்ஸ்க்ரீட் அக்சிலரேட்டிங் யூனிட் கொண்டிருப்பதால் இதன் வேகம் தாறுமாறாக இருக்கும். மேலும் இதில் தொழில் நுட்பங்களும் பாதுகாப்பு வசதிகளும் ஏராளமாக உள்ளன. இந்த எச்பி என்வி லேப்டாப் ரூ.50,000ல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X