Home
Computer

க்ராபிக்ஸ் வசதிகளுடன் புதிய எச்பி அல்ட்ராபுக்!

By Karthikeyan
க்ராபிக்ஸ் வசதிகளுடன் புதிய எச்பி அல்ட்ராபுக்!

சமீபத்தில் எச்பி நிறுவனம் ஒரு புதிய அல்ட்ராபுக்கை களமிறக்கி இருக்கிறது. இந்த அல்ட்ராபுக்கிறகு எச்பி என்வி 4-103டிஎஸ் அல்ட்ராபுக் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப் ஏராளமான வசதிகளுடன் வருகின்றது.

குறிப்பாக 14 இன்ட் எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும் இந்த அல்ட்ராபுக் 1.7 கிலோ ஹெர்ட்ஸ் இன்டல் கோர் ஐ5-3317யு ப்ராசரைக் கொண்டிருக்கிறது. மேலும் இது இன்டல் எச்எம்77 எக்ஸ்ப்ரஸ் சிப்செட்டையும் கொண்டிருக்கிறது. அதனால் இந்த லேப்டாப் அபார வேகத்தில் இயங்கும்.

அதோடு இதில் விளையாடுவதற்கும் மற்றும் க்ராபிக்ஸ் வேலைகள் செய்வதற்கும் சூப்பராக இருக்கும். இந்த எச்பி லேப்டாப் விண்டோஸ் 7 ஹோம் பேசிக் இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதோடு 4ஜிபி டிடிஆர்3 மெமரி, 500 ஜிபி சட்டா எச்டிடி, 0.3 எம்பி வெப்காம் மற்றும் எஸ்டி மெமரிகார்டு ஸ்லாட் போன்ற வசதிகளையும் இந்த லேப்டாப் வழங்குகிறது.

இந்த லேப்டாப்பில் ஏஎம்டி மொபிலிட்டி ரேடியோன் 7670எம் எச்டி க்ராபிக்ஸ் யூனிட் இருப்பதால் இதில் க்ராபிக்ஸ வேலைகளை சூப்பராக செய்ய முடியும். அதோடு இந்த லேப்டாப்பை இயக்குவதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

இரண்டு ஸ்பீக்கர்களுடன் வருவதால் இதில் இசை கேட்பதற்கும் மிக அருமையாக இருக்கும். அதோடு இணைப்பு வசதிகளுக்காக வைபை, ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி போன்றவை உள்ளதால் இதில் மிக விரைவாக தகவல் பரிமாற்றம் செய்யலாம்.

வீடியோவிற்காக எச்டிஎம்ஐ அவுட்புட்டும் இந்த லேப்டாப்பில் உள்ளது. இறுதியாக இந்த லேப்டாப் ஹெட்போன் மற்றும் மைக்ரோபோனையும் வழங்குகிறது. இந்த எச்பி அல்ட்ராபுக் ரூ.52,000க்கு விற்கப்பட இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X