எச்பி வழங்கும் ஆல் இன் ஒன் கம்ப்யூட்டர்கள்!

Posted By: Karthikeyan
எச்பி வழங்கும் ஆல் இன் ஒன் கம்ப்யூட்டர்கள்!

ஆல் இன் ஒன் கணினிகள் இப்போது மிகவும் பிரபலமாகி வருகின்றன. அதற்கு காரணம் இந்த கணினிகள் எல்லா விதமான பணிகளையும் செய்யக் கூடியவை. அதனால் இந்த கணினிகளை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர்.

அந்த வகையில் எச்பி நிறவனம் தனது ஆல் இன் ஒன் கணினிகளை சமீபத்தில் களமிறக்கி இருக்கிறது. இந்த கணினிகள் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களைக் கொண்டிருப்பதால் இவை நீடித்த உழைப்பையும் அதே நேரத்தில் உறுதியான செயல் திறனையும் கொண்டிருக்கின்றன.

இந்த கணினிகளுக்கும் எச்பி என்வி 23 மற்றும் எச்பி பெவிலியன் 23 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன. இரண்டுமே மிகத் தரமான டிசைன் மற்றும் ஸ்டைலைக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக என்வி 23 கணினி 23 இன்ச் அளவில் மிகப் பெரிய திரையுடன் வருகிறது. அதுபோல் இதில் பீட்ஸ் ஆடியோ இருப்பதால் இதில் சூப்பராக பாடல்களும் கேட்கலாம். இந்த கணினியில் ஐவி பிரிட்ஜ் அல்லது எஎம்டி டிரினிட்டி ப்ராசஸர்களை வைத்துக் கொள்ளலாம்.

இதன் சேமிப்பு 2 டிபி ஆகும். அது போல் இந்த கணினி எச்டிஎம்ஐ போர்ட், டிவி டியூனர், மற்றும் ப்ளூ-ரே ட்ரைவ் ஆகிய வசதிகளையும் வழங்குகிறது.

அதே நேரத்தில் எச்பி பெவிலியன் 23 கணனியும் 23 இன்ச் அளவில் திரையைக் கொண்டிருக்கிறது. இதன் சேமிப்பும் 2 டிபி ஆகும். இந்த கணினியில் இன்டல் கோர் ஐ5 ஐவி பிரிட்ஜ் அல்லது எஎம்டி ப்ராசஸர் ஆகியவற்றை வைத்துக் கொள்ளலாம். இந்த கணினி அன்றாட அலுவலகம் மற்றும் வீட்டு பணிகளை செய்வதற்கு மிக வசதியாக இருக்கும்.

இந்த இரண்டு கணினிகளும் வயர்லஸ் வசதி, எச்பி மேஜிக் கேன்வாஸ், எச்பி ட்ரூவிஷன் எச்டி வெப்காம் மற்றும் எச்பி லிங்க்அப் போன்ற வசதிகளுடன் வருகின்றன. எச்பி மேஜிக் கேன்வாஸ் மூலம் டிஸ்ப்ளேயை மிகவும் பெரிதாக்க முடியும்.

இந்த இரண்டு ஆன் இன் ஒன் கணினிகளும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. எச்பி என்வி 23 ரூ.50,000க்கும், எச்பி பெவிலியன் 23, ரூ.35,000க்கும் விற்கப்பட இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot