Home
Computer

உயர்ந்த தரத்தில் எச்பியின் புதிய லேப்டாப்!

By Karthikeyan
உயர்ந்த தரத்தில் எச்பியின் புதிய லேப்டாப்!

எச்பி நிறுவனத்தின் லேப்டாப்புகள் மிகவும் உயர்ந்த தரத்தில் இருப்பதாலும், அவற்றின் டிசைன் சூப்பராக இருப்பதாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அவற்றுக்கு நல்ல வரவேற்பு உண்டு. மேலும் அவற்றின் விலையும் நியாயமான முறையில் இருக்கும். இப்போது எச்பி அறிமுகப்படுத்தி இருக்கிற எச்பி என்வி 15 லேப்டாப் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த எச்பி என்வி 15 ஏறக்குறைய மேக்புக்கை ஒத்திருக்கிறது. ஆனால் கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளி நிறங்களில் வருகிறது. மேலும் அலுமினியத் தகட்டால் செய்யப்பட்டுள்ளதால் பார்க்க சூப்பராக உள்ளது. மேலும் இதன் கீபோர்டும் அருமையாக இருக்கிறது.

மேலும் இந்த என்வி15 அலுமினியம் ஒலி கட்டுப்பாடு மற்றும் துணை ஊபர் சிஸ்டம் கொண்ட டாக்டர் டெர் பீட்ஸ் ஆடியோ வசதிகளையும் கொண்டிருக்கிறது.

இந்த என்வி 15 லாப்டாப்பின் இயங்கு தளம் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் 64 பிட் ஆகும். அதுபோல் இந்த லேப்டாப் இன்டல் கோர் ஐ5 2430எம் 2.4 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரையும் கொண்டிருக்கிறது. டர்போ பூஸ்ட் கொண்டிருப்பதால் இதன் வேகம் அபாரமாக இருக்கும். மேலும் 3எம்பி எல்3 கேச்சும் இந்த லேப்டாப்பில் அடக்கம்.

க்ராபிக்ஸ் வேலைகளுக்காக எஎம்டி ரேடியோன் எச்டி க்ராபிக்ஸ் ஆக்சிலரேட்டர் யூனிட்டும் இந்த லேப்டாப் கொண்டிருக்கிறது. மேலும் 1333 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட 6ஜிபி ரேம் மற்றும் 500 ஜிபி ஹார்ட் டிஸ்க்கும் இந்த லேப்டாப்புக்கு பெருமை சேர்க்கும்.

இந்த என்வி 15 லேப்டாப்பின் டிஸ்ப்ளே எச்டி ப்ரைட்வியூவ் மற்றும் எல்இடி பேக்லிட் வசதி கொண்டு 15.6 இன்ச் அளவில் 1366 x 768 பிக்சல் ரிசலூசனுடன் வருகிறது. அதுபோல் 2 லேயர் சப்போர்ட்டுடன் கூடிய சூப்பர் மல்டி 8எக்ஸ் டிவிடியையும் இந்த லேப்டாப் வழங்குகிறது. இதில் எச்பியின் ட்ரூவிசன் எச்டி வெப்காமையும் நாம் பார்க்கலாம்.

இணைப்பு வசதிகள் என்று பார்த்தால் இன்டல் 802.11 எ/பி/ஜி/என் டபுள்யுலேன், வயர்லஸ் டிஸ்ப்ளே சப்போர்ட்டுடன் கூடிய ப்ளூடூத் இணைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இதன் கீபோர்டு முழு அளவிலான ரேடியன் பேக்லிட் வசதியைக் கொண்டதாகும்.

மின் திறனிற்காக இந்த லேப்டாப் 8 செல் லித்தியம் ஐயன் பேட்டரியைக் கொண்டுள்ளது. அதுபோல் அடோப் போட்டோசாப் மற்றும் அடோப் ப்ரீமியர் ஆகிய சாப்ட்வேர்களையும் இந்த லேப்டாப்பில் நாம் காண முடியும். மேலும் இந்த லேப்டாப் 2 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.

மேலும் இந்த லேப்டாப் ஒரு மல்டி மீடியா டிவைஸ் ஆகும். வீடியோ பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது மற்றும் உயர் அப்ளிகேசன்களை இயக்குவது போன்ற எல்லா வசதிகளையும் இந்த லேப்டாப்பில் அனுபவிக்கலாம்.

இதில் இன்டர்னல் டிரைவ் இல்லை என்றாலும் அதுபோல் குறைந்த பேட்டரி ஆயுளைக் கொண்டிருந்தாலும் மற்ற எல்லா வசதிகளிலும் பட்டையைக் கிளப்புகிறது. இந்த என்வி 15 லேப்டாப்பின் விலை ரூ.90,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X