Home
Computer

எச்பி வழங்கும் விலை உயர்ந்த புதிய அல்ட்ராபுக்!

By Karthikeyan
எச்பி வழங்கும் விலை உயர்ந்த புதிய அல்ட்ராபுக்!

எச்பி நிறுவனம் தனது புதிய என்வி 14 ஸ்பெக்டெர் என்ற அல்ட்ராபுக்கை இந்தியாவில் வரும் ஏப்ரலில் களமிறக்க இருக்கிறது. இதன் விலை ரூ.99999 ஆகும்.

இந் அல்ட்ராபுக்கின் எடை 1.7 கிலோவாகும். மேலும் இதன் திரையில் கீறல் விழாத அளவிற்கு தடுப்பு வசதிகள் உள்ளன.

இந்த என்வி அல்ட்ராபுக் 1600x900 பிக்சல் ரிசலூசன் கொண்ட 14 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. மேலும் இன்டல் கோர் ஐ5-2467எம் ப்ராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி எஸ்எஸ்டி வசதியும் இந்த அல்ட்ராபுக்கில் உண்டு. மேலும் இதில் இரண்டாவது 12ஜிபி எஸ்எஸ்டி வசதியும் உண்டு.

இதன் பேட்டரி இந்த அல்ட்ராபுக்கிற்கு 9 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இணைப்பு வசதிகளுக்காக இந்த அல்ட்ராபுக் யுஎஸ்பி3.0, எச்டிஎம்ஐ, மினி டிஸ்ப்ளே போர்ட், ஜிகாபிட் எர்த்நெட், இன்டல் விடி மற்றும் வயர்லஸ் ஆடியோ மற்றும் என்எப்சி போன்ற வசதிகளும் இந்த அல்ட்ராபுக்கில் உள்ளன.

இந்த அல்ட்ராபுக்கில் சூப்பரான சாப்ட்வேர்கள் உண்டு. அதாவது 2 வருட இலவச நோர்ட்டன் இன்டர்நெட் செக்யூரிட்டி வசதி, முழு அடோப் போட்டோஷாப் வசதி மற்றும் ப்ரீமியர் வசதி போன்றவை இந்த அல்ட்ராபுக்கில் உள்ளன.

மேலும் கூல் சென்ஸ் தொழில் நுட்பம், எச்பி இமேஜ் பேட், எச்பி ட்ரூவிஷன் எச்பி வெப்காம் போன்ற தொழில் நுட்பங்களும் இந்த என்வி அல்ட்ராபுக்கில் உண்டு.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X