எலைட்புக் 700 G5 மற்றும் ப்ரோபுக் 645 G4 பிஸ்னஸ் லேப்டாப்களை வெளியிட்ட ஹெச்பி.!

மேம்படுத்தப்பட்ட உற்பத்தி செயல்திறனை எதிர்பார்க்கும் தொழில் மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்காக இந்த புதிய நோட்புக் மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

|

ஏ.எம்.டி ரேசென் ப்ரோ ப்ராசஸ்சர்களை கொண்ட எலைட்புக் 700 G5 மற்றும் ப்ரோபுக் 645 G4 லேப்டாப்களை வெளியிட்டயுள்ளது ஹெச்பி. மேம்படுத்தப்பட்ட உற்பத்தி செயல்திறனை எதிர்பார்க்கும் தொழில் மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்காக இந்த புதிய நோட்புக் மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தன்டர்போல்ட் டாக் ஜி2 மற்றும் 4G LTE இணைப்பு வசதியையும் இதில் உள்ளன. இந்த புதிய எலைட்புக்700 G5 ன் துவக்க விலை $999 (சுமார் ரூ67,200) மற்றும் ப்ரோபுக் 645 G4 ன் துவக்க விலை $759(சுமார் 51,000) எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஹெச்.பி லேப்டாப்கள் இம்மாத இறுதியில் அமெரிக்காவில் விற்பனைக்கு வரவுள்ளன.

ஹெச்பி எலைட்புக்700 G5 தொடர்,மூன்றுவித வேறுபாடுகளுடன் வெளிவருகின்றன.

ஹெச்பி எலைட்புக்700 G5 தொடர்,மூன்றுவித வேறுபாடுகளுடன் வெளிவருகின்றன.

எலைட்புக்735 G5 1366×768 பிக்சல் உள்ள 13.3இன்ச் திரையுடனும்,எலைட்புக்745 G5 1920×1080 பிக்சல் உள்ள 14இன்ச் திரையுடனும் மற்றும் எலைட்புக்755 G5 2560×1440 பிக்சல் உள்ள 15.6இன்ச் திரையுடனும் உள்ளன.

பாஸ்ட் சார்ஜ்

பாஸ்ட் சார்ஜ்

இந்த அனைத்து மாடல்களும், நாள் முழுவதும் தாக்கு பிடிக்கும் பேட்டரியுடனும், 30நிமிடத்தில் 50% சார்ஜ் செய்யும் ஹெச்பி பாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பமும் உள்ளது. இந்த நோட்புக்களில் தானாகவே ப்ரைட்னஸை மாற்றம் செய்யும் ஆம்பியன்ட் லைட் சென்சாரும், இரைச்சலை தடுக்கும் மைக்ரோபோனும் உள்ளது.

கேமரா

கேமரா

ஹெச்பி நிறுவனம் ஹெச்டி கேமராவையும், விண்டோஸ் ஹலோவுடன் இயங்கும் இன்ப்ராரெட் வெப்கேம் வசதியும் வழங்குகிறது. விண்டோலின் இன்க் அண்ட் ரைட் மற்றும் விரல்களால் தொடுவதன் மூலம் திரையில் உள்ளவற்றை ஹைலைட் செய்ய தொடுதிரை வசதியுள்ள லேப்டாப் மாடலையும் தேர்வு செய்யலாம்.

இணைய வசதி

இணைய வசதி

ஹெச்பி எலைட்புக்700 G5 தொடர் ஏ.எம்.டி ரேசென் 7 ப்ரோ 2700U ப்ராசஸ்சர்களுடன் கூடிய ரேடியான் வேகா 10 ஜி.பி.யூ இயக்கியை கொண்டுள்ளது. 1TB PCIe/NVMe SSD மற்றும் 500GB HDD சேமிப்புதிறனுள்ள மாடல்களை தேர்வுசெய்யலாம். இணைப்புதிறனை பொறுத்தவரை, இதில் வைஃபை 802.11ac மற்றும் ப்ளூடூத் , யூ.எஸ்.பி டைப்ஏ போர்ட், தன்டர்போல்ட்3 வசதியுள்ள டைப்சி போர்ட்டும் உள்ளது. அதிவேக இணைய வசதி அளிக்கும் 4G மோடம் வசதியும் தேர்ந்தெடுக்கலாம்.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

ஹெச்பி எலைட்புக்735 G5 லேப்டாப் 17.7 மில்லிமீட்டர் அடர்த்தி மற்றும் 1.33கிலோ எடையும் உள்ளது. அதற்கு மாறாக, ஹெச்.பி எலைட்புக்745 G5 லேப்டாப் 17.9 மில்லிமீட்டர் அடர்த்தி மற்றும் 1.53கிலோ எடையும், ஹெச்.பி எலைட்புக்755 G5 லேப்டாப் 18.25 மில்லிமீட்டர் அடர்த்தி மற்றும் 1.86 கிலோ எடையும் உள்ளது.
ஹெச்பி ப்ரோபுக்645 G4 பொறுத்தவரை, இன்டெல் ப்ராசஸ்சர்களை கொண்ட ஹெச்பி ப்ரோபுக்640 G3 மற்றும் ஹெச்.பி ப்ரோபுக்650 G4 க்கு இடைப்பட்டது. ஹெச்பி ப்ரோபுக்645 G4 ல் ஏ.எம்.டி ரெசென் ப்ரோ ப்ராசஸ்சருடன் ரேடியான் வேகா ஜி.பி.யூ இயக்கி உள்ளது. இதில் 15.6இன்ச் திரையும், 20.99 மில்லிமீட்டர் அடர்த்தியும், 1.73கிலோ எடையும் கொண்டது. இணைப்புத்திறனை பொறுத்தவரை, யூ.எஸ்.பி டைப்-ஏ,யூ.எஸ்.பி டைப்-சி, எச்.எம்.டி.ஐ ,டாக் போர்ட் மற்றும் மிலிட்டரி கிரேடு பில்டும் உள்ளது.இதில் உள்ள ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், எலைட்புக் 700 G5 தொடரை போல இல்லாமல் பேங்&ஓலுப்சன் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

விண்டோஸ்1

விண்டோஸ்1

ஹெச்பி எலைட்புக் 700 G5 தொடர் மற்றும் ப்ரோபுக் 645 G4 ஆகிய இரண்டும் விண்டோஸ்10 இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும் கார்டனா வசதியும் உள்ளது. மேலும் பெருநிறுவன பயனர்களுக்காக ஒருங்கிணைந்த சேமிப்பு வசதியுள்ள ஒன்டிரைவ் பைல்ஸ் ஆன்-டிமேன்ட் போன்ற வசதிகளும் உள்ளன.

Best Mobiles in India

English summary
HP EliteBook 700 G5 Series, ProBook 645 G4 Business Laptops With AMD Ryzen Pro Processors Launched ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X