தரமான லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது ஹெச்பி நிறுவனம்.!
ஹெச்பி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது. இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனம் எலைட் டிராகன்ஃபிளை அல்ட்ரா-லைட் எனும் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஹெச்பி டிராகன்ஃபிளை அல்ட்ரா-லைட் மாடல் பொதுவாக வணிக பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும். குறிப்பாக சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

13-இன்ச் டிஸ்பிளே
இந்த லேப்டாப் மாடல் பொதுவாக 13-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

MIL-STD 810G சான்றிதழ்
ஹெச்பி டிராகன்ஃபிளை அல்ட்ரா-லைட் சாதனம் பொதுவாக விப்ரோ இன்டெல் சிபியு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது, மேலும் மேக்புக் போன்ற இயந்திரங்களுக்கு இது ஒரு நல்ல போட்டியாளராக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. MIL-STD 810G சான்றிதழ், ஷட்டர் திறன் கொண்ட வெப்கேமிற்கு ஆதரவாக ஐஆர் கேமராவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

16ஜிபி ரேம்
ஹெச்பி டிராகன்ஃபிளை அல்ட்ரா-லைட் மாடல் 16ஜிபி ரேம் மற்றும் 2டிபி உள்டக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது,மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

400-nit பேனல்
டிராகன்ஃபிளை அல்ட்ரா-லைட் மாடல் எப்எச்டி 400-nit பேனல் வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் நோட்புக் போன்று இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும் என்பதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

16.5மணிநேரம் வரை
ஹெச்பி டிராகன்ஃபிளை அல்ட்ரா-லைட் சாதனம் சிங்கிள் சார்ஜரில் 16.5மணிநேரம் வரை பேட்டரி ஆதரிக்கிறது. பின்பு வெளிப்புறம் எடுத்து சென்று பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த லேப்டாப் மாடல்.
ஹெச்பி டிராகன்ஃபிளை அல்ட்ரா-லைட் சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.1,13,964-ஆக உள்ளது, மேலும் விரைவில்இந்த சானதம இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் அமெரிக்காவில் மட்டும்இந்த ஹெச்பி டிராகன்ஃபிளை அல்ட்ரா-லைட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications