Home
Computer

ரூ.23,000 விலையில் எச்பி வழங்கும் புதிய லேப்டாப்!

By Karthikeyan
ரூ.23,000 விலையில் எச்பி வழங்கும் புதிய லேப்டாப்!

லேப்டாப் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் எச்பி நிறுவனம் ஏராளமான குறைந்த விலை கொண்ட லேப்டாப்புகளை விற்பனை செய்து வருகிறது. அதில், எச்பி காம்பெக் சிக்யூ43-3001யு மாடல் பெரிதும் வரவேற்கப்படும் லேப்டாப்பாக இருக்கிறது.

இந்த லேப்டாப்பில் அனைத்து தேவைகளுக்கும் போதுமான அளவு தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றன. இதில் ஏபியு டூவல் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டிருக்கிறது.

2ஜி டிடிஆர்3 ரேம் உள்ளதோடு, இதில் 8 ஜிபி கூடுதல் ரேம் மெமரியை விரிவுப்படுத்திக்கொள்ளும் வசதியும் உண்டு. இதன் 14 இஞ்ச் ஹைடெபினிஷன் எல்இடி திரை அதிக துல்லியத்தை வழங்குகிறது.

320 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட ஹார்டு டிஸ்க் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏஎம்டி ரேடியோன் எச்டி 6310 கிராபிக்ஸ் கார்டும் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

இதில், வீடியோ காலிங் வசதிக்காக 0.3 மெகா பிக்ஸல் கொண்ட அடிப்படை கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

6 செல் பேட்டரி 3 மணிநேரம் பேக்கப்பை வழங்கும். ப்ளூடூத், ஈத்தர்நெட், வயர்லெஸ் லேன் இணைப்பு ஆகியவற்றுடன் அனைத்து வகை போர்ட்டுகளையும் கொண்டிருப்பது அனைத்து சாதனங்களையும் இணைக்க ஏதுவாக இருக்கும்.

இது இலகு எடை கொண்டிருப்பதால் கையாள்வதும் மிக எளிதாக இருக்கும். இந்த லேப்டாப் ரூ.23,000 விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X