Just In
- 1 hr ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 1 hr ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 1 hr ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
- 4 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
Don't Miss
- News
"அதிமுகவினர் எல்லாரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது" - சசிகலா
- Finance
ரூ.10000000000000 இழப்பு.. வெறும் 7நாளில் அதானி சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி.. சந்தை மதிப்பு 51% சரிவு..!
- Movies
தளபதி 67 டைட்டில் இதுதானா? குருதியில் புள்ளி வைத்து விஜய்யின் உருவத்தை கோலம் போட்டது அதுக்குத்தானா?
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரூ.32,999-விலையில் ஹெச்பி குரோம்புக் எக்ஸ்360 14ஏ லேப்டாப் அறிமுகம்.!
ஹெச்பி நிறுவனம் புதிய குரோம்புக் எக்ஸ்360 14ஏ லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த லேப்டாப் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஹெச்பி குரோம்புக் எக்ஸ்360 14ஏ லேப்டாப் மாடல் ஆனது 14-இன்ச் எச்டி பிளஸ் டச் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் 1,366x768 பிக்சல் தீர்மானம், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

ஹெச்பி குரோம்புக் எக்ஸ்360 14ஏ லேப்டாப் மாடலில் மிகவும் எதிர்பார்த்த AMD 3015Ce பிராசஸர் வசதி மற்றும் AMD ரேடியான் ஒருங்கிணைந்த கிராபிக்ஸ் வசதியும் உள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடல் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

இந்த குரோம்புக் எக்ஸ்360 14ஏ லேப்டாப் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல். பின்பு வீடியோ அழைப்புகளுக்கு என்றே ஒருங்கிணைந்த இரட்டை வரிசை டிஜிட்டல் மைக்ரோஃபோன்களுடன் ஒரு 720p HD வைட்-விஷன் வெப்கேம் வசதி இவற்று இடம்பெற்றுள்ளது.

ஹெச்பி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள லேப்டாப் மாடலில் 47Whr பேட்டரி வசதி உள்ளது. எனவே ஒரு முறை சார்ஜ் செய்தால் 12.5 மணிநேரம் வரை நீடிக்கும். குறிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேபோல் 45 வாட் யுஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமானகுரோம்புக் எக்ஸ்360 14ஏ லேப்டாப் மாடல்.

வைஃபை 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் v5, இரண்டு யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஒரு யுஎஸ்பி டைப்-ஏ போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஹெச்பி குரோம்புக் எக்ஸ்360 14ஏ லேப்டாப் மாடல். அதேபோல் இந்த சாதனத்தின் எடை 1.49 கிலோகிராம் என்று கூறப்படுகிறது.

ஹெச்பி குரோம்புக் எக்ஸ்360 14ஏ லேப்டாப் மாடலின் விலை ரூ.32,999-ஆக உள்ளது. அதேபோல் இந்த சாதனம் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அமேசான் வலைத்தளத்தில் ஹெச்பி நிறுவனத்தின் லேப்டாப் மாடல்களுக்குவிலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அமேசான் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது இந்த சிறப்பு விற்பனையில் ஹெச்பி 15 (2021), ஹெச்பி 14 (2021), ஹெச்பி 14 Ryzen 5 5500U,உள்ளிட்ட பல்வேறு லேப்டாப் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களுக்கும் அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த
விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470