உலகின் முதல் கழற்றக்கூடிய க்ரோம்புக்கை வெளியிட்ட ஹெச்பி.!
க்ரோம் இயங்குதளத்தில் செயல்படும் க்ரோம்புக் X2ல் , ஆண்ராய்டு செயலிகளையும் பயன்படுத்தலாம். இதில் 12.3 இன்ச் குவாட் ஹெச்.டி டிஸ்ப்ளேவுடன் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பும் உள்ளது.
ஹெச்பி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட க்ரோம்புக் X2வை , உலகின் முதல் 'தனியே கழற்றும் வகையிலான' க்ரோம்புக் என தெரிவித்துள்ளது. இதன் திரையை மட்டும் தனியே கழற்றி டேப்லெட்டாக பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த க்ரோம்புக் X2 -ன் தொடக்க விலை 599.99 டாலர் ( சுமார் ரூ39,000). இது HP.com இணையதளம் மற்றும் அமெரிக்காவில் உள்ள Bestbuy கடைகளில் ஜூன் 10 முதல் விற்பனைக்கு வரும். இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளில் எப்போது கிடைக்கும், விலை எவ்வளவு போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

ஹெச்.பி க்ரோம்புக் X2ன் சிறப்பம்சங்கள்
க்ரோம் இயங்குதளத்தில் செயல்படும் க்ரோம்புக் X2ல் , ஆண்ராய்டு செயலிகளையும் பயன்படுத்தலாம். இதில் 12.3 இன்ச் குவாட் ஹெச்.டி டிஸ்ப்ளேவுடன் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பும் உள்ளது. இந்த க்ரோம்புக் 7ம் தலைமுறை இன்டெல் ப்ராசஸ்சர் மற்றும் 8GB LPDDR3 ரேம் வசதியுடன் செயல்படுகிறது.
க்ரோம்புக் X2 ல் 32GB உள்ளடக்கிய சேமிப்புதிறனும், மைக்ரோ SD கார்டு மூலம் 256GB சேமிப்புதிறன் வரையிலும் பயன்படுத்தலாம். அதனுடன், இரண்டு வருடம் இலவசமாக 100GB கூகுள் கிளவுட் சேமிப்புதிறனையும் ஹெச்.பி வழங்குகிறது. ஆடியோவை பொறுத்தவரையில், B&O ப்ளேஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளன.
க்ரோம்புக் X2 ல் 13 மெகாபிக்சல் பின்புற கேமராவும், 5மெகாபிக்சல் முன்புற கேமராவும் உள்ளது. போர்ட்களை பொறுத்தவரை, இரண்டு டைப் சி போர்ட்கள், மைக்ரோ SD கார்டு போர்ட் மற்றும ஆடியோ ஜாக்குகள் உள்ளன. குறிப்பிட்ட சில மாடல்களில் மட்டுமே வரும் ஆக்டிவ் பென் வசதியும் உள்ளது.
க்ரோம் ஓ.எஸ், உலகின் அதிகம் பயன்படுத்தும் செயலிகளின் தளம் மற்றும் கூகுளின் அனைத்து சேவைகளும் ஒருங்கே பயன்படுத்தும் வகையில் உள்ள க்ரோம்புக் X2 வாடிக்கையாளர்களை நிச்சயம் ஈர்க்கும். உலகின் முதல் கழற்றக்கூடிய க்ரோம்புக் மூலம் மக்கள் புதிய வழிகளை செயல்படுத்தி க்ரோம் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரை உபயோகிக்க இயலும் என கூறுகிறார் ஹெச்பி ன் துணைத்தலைவர் கெவின் ப்ரோஸ்ட்.



Click it and Unblock the Notifications