பட்ஜெட் விலையில் ஹெச்பி லேப்டாப் அறிமுகம்.! நம்பி வாங்கலாமா?
ஹெச்பி நிறுவனம் புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் புதிய ஹெச்பி க்ரோம்புக் 14 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் சிறந்த வடிவமைப்புடன் புதிய தொழில்நுட்ப அடிப்படையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெச்பி க்ரோம்புக் 14 லேப்டாப்:
ஹெச்பி க்ரோம்புக் 14 லேப்டாப் மாடல் பொதுவாக 14-இன்ச் எச்டி அல்டரா-பிரைட் டச்ஸ்கிரீன் வடிவமைப்பை கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான சாதனம்.
சேமிப்பு வசதி:
இந்த சாதனத்தில் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு வசதி மற்றும் 100GB Google Cloud சேமிப்பு வசதியும் உள்ளது. மேலும் பல்வேறு ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்த இந்த லேப்டாப் சாதனம் அருமையாக உதவும்.

பேட்டரி அமைப்பு:
ஹெச்பி க்ரோம்புக் 14 லேப்டாப் சாதனத்தில் 47வாட் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது, பின்பு வைஃபை, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோஃபை டேட்டா:
ஹெச்பி க்ரோம்புக் 14 வாடிக்கையாளர்களுக்கு ஜியோஃபை சாதனத்திலிருந்து ஒரு வருடத்திற்கு 2 ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவையும் பின்பு 14-க்கும் மேற்பட்ட ஜியோ டிஜிட்டல் பயன்பாடுகளுக்கான முதன்மை சந்தாவுடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.54கிலோ எடை
ஹெச்பி க்ரோம்புக் 14 லேப்டாப் சாதனம் பொதுவாக Apollo Lake dual core மூலம் இயக்கப்படுகிறது, பின்பு 1.54கிலோ எடையுன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான விலை:
ஹெச்பி க்ரோம்புக் 14 லேப்டாப் சாதனம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் ரூ.23,990-விலையில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த சாதனத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications