புதிய இசெட் புக், மானிட்டர், லேப்டாப் சாதனங்களை அறிமுகப்படுத்திய ஹெச்பி.!

10TB சேமிப்பு திறனுடன் , 20% சிறந்த தெர்மல் செயல்திறன் இருப்பதால் மிகவும் குளிர்ச்சியானது. இது சிறு தொழில்களுக்கும், பொறியியல் மாணவர்களுக்கும் சிறந்த விலையில் கிடைக்கிறது.

|

இசட் புக் ஸ்டூடியோ x360 G5 போன்ற ஐந்தாம் தலைமுறை ஹெச்பி இசட் புக் மொபைல் வொர்க்ஸ்டேசன்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளது ஹெச்.பி நிறுவனம். இந்த புதிய கருவிகள் திறன்சார்ந்த மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கும், எக்ஸிக்யூடிவ்களுக்கும், மாணவர்களுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாற்றக்கூடிய 2 இன் 1 வசதி கொண்ட இசெட் புக் ஸ்டூடியோ x360 G5 லேப்டாப் 360 டிகிரி சூழலக் கூடியது. மேலும் இதில் அதிக திறன் வாய்ந்த இன்டெல் செனான் ப்ராசெஸ்சர் மற்றும் நிவ்டியா(Nvidia)கிராபிக்ஸ் வசதி உள்ளது.

புதிய இசெட் புக், லேப்டாப் சாதனங்களை அறிமுகப்படுத்திய ஹெச்பி.!


ஹெச்பி-ன் கூற்றுப்படி, இது தான் உலகின் மிகவும் திறன்வாய்ந்த கணிணி. மேலும் இதனுடன் 8ம் தலைமுறை இன்டெல் செனான் ப்ராசஸ்சர் மற்றும் நிவ்டியா குவாட்ரோ P1000 கிராப்க்ஸ் சேர்க்க முடியும். இதில் 1080p அல்லது 4k வசதியுள்ள 15.6 இன்ச் ஹெச்.பி ட்ரீம் ப்ளவர் திரை உள்ளது.

பயனர்கள் 8ம் தலைமுறை கோர் ஐ5 அல்லது 6கோர் ஐ7 ப்ராசஸ்சர்களில் ஒன்றை தேர்வு செய்யலாம். மேலும் இதன் பேட்டரி 16 மணி நேரம் தாக்கு பிடிக்கக்கூடியது மற்றும் 30 நிமிடங்களிலேயே 50% சார்ஜ் ஆகக்கூடியது.

திறன்மிகு பணியாளர்களை குறி வைத்து தயாரிக்கப்பட்ட இந்த புதிய லேப்டாப் பிரகாசமான 4k திரையை கொண்டது. ஹெச்பி ட்ரீம் கலர் எதிரொளிப்பில்லா திரை 100% அடோப் RGB வசதியுடன் 15இன்ச் ரெட்டினா திரை உள்ள ஆப்பிள் மேக் புக்கை விட 20% அதிக பிரகாசமுடையது. டெல் XPS ultrasharp 4k விட 50% பிரகாசமானது.

புதிய இசெட் புக், லேப்டாப் சாதனங்களை அறிமுகப்படுத்திய ஹெச்பி.!


இசெட் புக் ஸ்டூடியோ x360 G5 6TB சேமிப்பு திறனுடன், ஆப்பிள் மேக் புக் ப்ரோ8 ஐ விட அதிக செயல்திறன் கொண்டது. இந்த லேப்டாப் களை தவிர்த்து, உலகின் திறன் வாய்ந்த மொபைல் செயல்தளமான (work station) இசெட்புக் 17 G5 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வெளியிட்டை விட 50% அதிக செயல்திறனும், 64GB ரேம் மற்றும் நிவ்டியா குவாட்ரோ P5200 கிராபிக்ஸ் கொண்டுள்ளது.

10TB சேமிப்பு திறனுடன் , 20% சிறந்த தெர்மல் செயல்திறன் இருப்பதால் மிகவும் குளிர்ச்சியானது. இது சிறு தொழில்களுக்கும், பொறியியல் மாணவர்களுக்கும் சிறந்த விலையில் கிடைக்கிறது. இந்த நோட்புக், 6கோர் இன்டெல் செனான் இயக்கி (processor), 32GB ரேம், 4TB சேமிப்பு திறன், நிவ்டியா குவாட்ரே கிராபிக்ஸ் வசதிகளை கொண்டது.

கடைசியாக ட்ரீம்கலர் Z27×G2 டிஸ்ப்ளே என்ற மானிட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் துல்லியமான நிறங்கள் கொண்ட 27 இன்ச் IPS திரை, 98% அடோப் RGB, 99% DCI P3வசதிகள் உள்ளன. உள்ளடக்கிய பல்வேறு பாப் அப் சென்சார்கள் உள்ளன. குறிப்பாக 2017ல் அறிமுகப்படுத்திய ஹெச்பி இசட்புக் X2 , தற்போது 8ம் தலைமுறை இன்டெல் கோர் இயக்கிகளை பெற்றுள்ளது.

புதிய இசெட் புக், லேப்டாப் சாதனங்களை அறிமுகப்படுத்திய ஹெச்பி.!
How to find vehicle owner detail (GIZBOT TAMIL)

விலை மற்றும் கிடைக்கும் காலத்தை பொறுத்தவரை, இசெட்புக் ஸ்டூடியோ x360 மற்றும் இசட்புக் ஸ்டூடியோ முறையே ரூ.97,400 மற்றும் ரூ. 84,400 விலைக்கு அடுத்த மாதத்தில் இருந்து கிடைக்கும். மே மாதத்தில் கிடைக்கும் வகையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இசெட்புக் 17 மற்றும் இசட்புக் 15 ன் விலை இன்னும் வெளியாகவில்லை. அடுத்த மாதம் வெளியாகும் ஹெச்பி இசெட்புக் 15V ன் விலை ரூ.61,700. கடைசியாக ஹெச்பி ட்ரீம்கலர் Z27×G2 ன் திரை, ரூ.1,30,000 விலையில் இப்போதே அமெரிக்காவில் கிடைக்கிறது.
Best Mobiles in India

English summary
HP Announces New ZBook Convertible, Laptop, Notebooks, Monitor: Price, Specifications, Features ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X