Home
Computer

வரிசை கட்டும் எச்பி ஆல் இன் ஒன் கணினிகள்

By Karthikeyan
வரிசை கட்டும் எச்பி ஆல் இன் ஒன் கணினிகள்

லேப்டாப்புகளைக் களமிறக்கும் எச்பி நிறுவனம் மேலும் பல புதிய ஆல் இன் ஒன் கணினிகளை வெகு விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய கணினிகள் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வர இருக்கின்றன.

இந்த கணினிகளில் உயர்தர மாடல்களான ஸ்பெக்டர் ஒன் 23 இன்ச் தொடுதிரையுடன் வருகின்றன. அதோடு இன்டல் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்கள், 6ஜிபி ரேம், 750ஜிபி அல்லது 1டிபி எச்டிடி இடவசதி, பீட்ஸ் ஆடியோ, என்எப்சி மற்றும் எச்பி ட்ரூவிஷன் வெப் கேமரா போன்ற வசதிகளுடன் இந்த கணினிகள் வருகின்றன.

இந்த கணினிகள் வரும் நவம்பர் 14 அன்று அமெரிக்காவில் 1,299 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

இவற்றைத் தவிர்த்து எச்பி மேலும் 2 விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும் கணினிகளைக் களமிறக்க இருக்கிறது. டச்ஸ்மார்ட் எஐஒஎஸ் என்று அழைக்கப்படும் இந்த கணினிகள் ஐவி பிரிட்ஜ் சிலிகான வசதிகளுடன் வருகின்றன. மேலும் இவை 20 இன்ச் மற்றும் 23 இன்ச் அளவு தொடுதிரையுடன் வருகின்றன.

வரும் அக்டோபர் 23 அன்று இந்த கணினிகள் விற்பனைக்கு வர இருக்கின்றன. 20 இன்ச் கணினிகள் 849 அமெரிக்க டாலர்களுக்கும் 23 இன்ச் கணினிகள் 1,099 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்பட இருக்கின்றன.

மேலும் எச்பி பெவிலியன் 20 என்ற பெயரில் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும் கணினியும் வர இருக்கின்றன. இந்த கணினி 499 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட இருக்கின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X