14-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் அசத்தலான ஹெச்பி க்ரோம்புக் லேப்டாப்.!
ஹெச்பி க்ரோம்புக் 14 லேப்டாப் 47.36வாட் பேட்டரியை கொண்டுள்ளது, எனவே 9மணி நேரம் பேட்டரி ஆயுள் வழங்கும். பின்பு இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.18,706-ஆக உள்ளது.
ஹெச்பி நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி விரைவில் நடைபெறும் சிஇஎஸ் 2019-நிகழ்வில் ஹெச்பி நிறுவனம் தனது க்ரோம்புக் 14 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்வதாக
தெரிவித்துள்ளது.

மேலும் ஹெச்பி க்ரோம்புக் 14 சாதனம் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த லேப்டாப் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிஸ்பிளே:
ஹெச்பி க்ரோம்புக் 14 லேப்டாப் மாடல் 14-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1366x768 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான சாதனம் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:
இந்த லேப்டாப் மாடல் பொதுவாக ஏஎம்டி ஏ4-9120சி செயலி மற்றும் 4ஜிபி ஆஃப் டிடிஆர்4 ரேம் வசதி, பின்பு 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த அசத்தலான லேப்டாப் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:
ப்ளூடூத் 4.2, வைஃபை 802.11, யுஸ்பி 3.1 டைப்-சி,இரண்டு யுஸ்பி டைப்-ஏ 2.0, மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர், வெப் கேம் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் ஹெச்பி க்ரோம்புக் 14 லேப்டாப் மாடல்.

விலை:
ஹெச்பி க்ரோம்புக் 14 லேப்டாப் 47.36வாட் பேட்டரியை கொண்டுள்ளது, எனவே 9மணி நேரம் பேட்டரி ஆயுள் வழங்கும். பின்பு இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.18,706-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்திற்கு போட்டியாக ஏசர்
க்ரோம்புக் 315 அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications