64ஜிபி சேமிப்பு திறனுடன் புதிய டேப்லெட் - எச்பி மும்முரம்

அதன்படி எச்பி டேப்லெட் மற்ற டேப்லெட்களில் இல்லாத அளவு 64ஜிபி சேமிப்பு வசதியுடன் கூடிய புதிய டச்பேட் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இது கண்டிப்பாக ஆப்பிள் ஐபோன்களுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
எச்பி 64ஜிபி டச்பேடின் சிறப்பம்சங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் தற்சமயம் பிரான்சில் அதை அறிமுகப்படுத்துவார்கள் என தெரிகிறது. அதிகாரப்பூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லையானாலும் இதன் சிறப்பம்சங்களை பற்றி பலவிதமான தகவல்கள் வருகின்றன.
அதாவது புதிய எச்பி 64ஜிபி டச்பேட் டேப்லெட்டில் 64ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட இரட்டை சேமிப்பு வசதியை கொண்டிருக்கும். இதனால் ஏராளமான திரைப்படங்களையும், பாடல்களையும் சேமிக்க முடியும்.
எச்பி 64ஜிபி டச்பேட் அதிவிரைவு 1.2ஜிகாஹெர்ட்ஸ் க்யூவல்காம் ஸ்நாப்ட்ராகன் டூவல் கோர் எபிக்யு-8060 பிராஸஸருடன் 1ஜிபி ரேமையும் கொண்டிருப்பதால் இதன் செய்திறன் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இதன் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா வீடியோ உரையாடல் செய்ய வசதியாக இருப்பதோடு அது 246எம்எம் அகல திரையில் துல்லியமான வீடியோவை வழங்குகிறது. இதன் அகல திரை படம் பார்ப்பதற்கும் வெப் ப்ரவுஸிங் செய்வதற்கும் மிகவும் வசதியாக இருக்கிறது.
எச்பி 64ஜிபி டச்பேட் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வரவிருக்கிறது. இதன் மின்திறன் ஸ்டாண்டர்டு போ வசதியை பெற்றுள்ளது. மேலும் வீடியோ கேம், ப்ளூடூத் மற்றும் வைபை அகிய வசதிகளும் இவற்றில் ஏராளம்.
எச்பி 64ஜிபி டச்பேட் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. இருப்பினும், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிற்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். இதன் விலை ரூ.28,000 மாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summery:


Click it and Unblock the Notifications