விண்டோஸ் 10 கணினியில் அமேசான் அலெக்சா பயன்படுத்துவது எப்படி?

வாய்ஸ் அசிஸ்டன்ட் மென்பொருள் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் சமீபத்தில் கைகோர்ப்பதாக அறிவித்தன.

|

ஸ்மார்ட்போன் தவிர இன்று நாம் பயன்படுத்தும் பல்வேறு சாதனங்களில் குரல் மூலம் இயங்கக்கூடிய அசிஸ்டன்ட் மென்பொருள்கள் மெல்ல வழங்கப்படுகின்றன. எனினும் இவை பெரும்பான்மை மக்களால் பயன்படுத்தப்படாமலேயே உள்ளது. குரல் மூலம் இயங்கும் இவ்வகை மென்பொருள்களை வாய்ஸ் அசிஸ்டன்ட் என அழைக்கப்படுகின்றன.

விண்டோஸ் 10 கணினியில் அமேசான் அலெக்சா பயன்படுத்துவது எப்படி?

வாய்ஸ் அசிஸ்டன்ட் மென்பொருள் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் சமீபத்தில் கைகோர்ப்பதாக அறிவித்தன. 2018 மைக்ரோசாஃப்ட் பில்டு டெவலப்பர்கள் மாநாட்டில் இருநிறுவனங்களும் தங்களின் ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட்கள் எவ்வாறு வேலை செய்யும் என்பதை விளக்கின.

டிஜிட்டல் அசிஸ்டன்ட்

டிஜிட்டல் அசிஸ்டன்ட்

இரு நிறுவனங்களும் தங்களின் டிஜிட்டல் அசிஸ்டன்ட் சேவைகளை மற்ற தளங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் முதற்கட்டமாக இரு நிறுவனங்கள் இடையே போடப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் படி அலெக்சா மற்றும் கார்டனா சேவைகள் இருநிறுவன தளங்களிலும் வேலை செய்யும்.

விண்டோஸ் 10

விண்டோஸ் 10

விண்டோஸ் தளத்தில் அலெக்சாவை வழங்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணியாற்றி வருகிறது, எதிர்காலத்தில் இந்த அம்சம் விண்டோஸ் 10 மட்டுமின்றி ஹெச்பி, லெனோவோ, அசுஸ் மற்றும் ஏசர் நிறுவன சாதனங்களிலும் வேலை செய்யும்.

எனினும் உங்களது லேப்டாப் இந்த அம்சம் வேலை செய்யாத பட்டியலில் இருந்தால், அமேசான் அலெக்சாவை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டும். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

விண்டோஸ் 10-இல் அலெக்சா பயன்படுத்த தேவையானவை:

விண்டோஸ் 10-இல் அலெக்சா பயன்படுத்த தேவையானவை:

1 - விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட லேப்டாப்

2 - இன்டர்நெட் இணைப்பு

3 - அமேசான் லாக்-இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு

4 - துவங்கும் முன் விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்ய வேண்டும்

5 - இனி மைக்ரோசாஃப்ட் வலைத்தளம் அல்லது விண்டோஸ் அப்டேட்டில் இருந்து '.Net Framework 4.7.2' டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்

6 - மொழி செட்டிங்களை ஆங்கிலத்திற்கு (English US) மாற்ற வேண்டும்

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

1 - விண்டோஸ் 10 தளத்துக்கான அமேசான் அலெக்சாவை டவுன்லோடு செய்ய வேண்டும்

2 - இன்ஸ்டாலரை ரன் செய்து, திரையில் வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்

3 - இனி ஸ்டார்ட் மெனு சென்று அலெக்சா செயலியை திறக்க வேண்டும்

4 - விதிமுறைகளை ஒப்புக் கொள்ள 'continue' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்


5 - அடுத்து "Configure Alexa on PC settings" திரையில் ‘Launch the app on sign into this computer' மற்றும் ‘Allow app sounds' box ஆப்ஷன்கள் க்ளிக் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்து பின் ‘Finish Setup' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

6 - இனி, அமேசான் அக்கவுன்ட் விவரங்களை கொண்டு லாக்-இன் செய்ய வேண்டும்


7 - லாக்-இன் செய்ததும் அலெக்சாவை பயன்படுத்த துவங்கலாம்

Best Mobiles in India

English summary
How to use Amazon Alexa on any Windows 10 PC : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X