கம்பியூட்டர் எப்போதும் வேகமாக இயங்க...!

Written By:

இன்றைக்கு கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓப்பன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உங்கள் கணினி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.

ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை மூடும் போது பஅவ்வாறு பண்ணும் போது தேவையல்லாத பைல்கள் ரேம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.

டெக்ஸ்டாப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வால்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரேம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.

டெக்ஸ்டாப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரேம்முக்கு ( RAM ) செல்லும்...

கம்பியூட்டர் எப்போதும் வேகமாக இயங்க...!

எப்போழுதும் ரீஸைக்கிள் பின்னில் ( Recyclebin) இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.தினமும் இன்டநெட் டெம்பரரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டிப்ராக்மென்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹார்ட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.

உங்கள் ஹார்ட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்துவையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ட்டால் பண்ண முடியும்.

இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot