விண்டோஸ் 7ல் இந்த விஷயத்தை நிறுத்த...!

By Keerthi
|

இன்றைக்கு விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனக்கென மாறா நிலையில் சில வரையறைகளைக் கொண்டதாகவே நாம் பெறுகிறோம்.

மேலும் அவற்றில் சிலவற்றை நமக்கு பிடிக்காமல் இருக்கும்.

அவற்றை இப்படி செய்து, நிலை நிறுத்தினால் என்ன? என்ற கேள்வியுடன், அதற்கான வழிகள் அதில் உள்ளனவா என்று ஆய்வு செய்வோம். ஒரு சில பொதுவான எதிர்பார்ப்புகளை எப்படி மேற்கொள்வது என கீழே செயல்முறைகள் காட்டப்பட்டுள்ளன.

உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்படுகையில், இதனுடன் வரும் சில விளையாட்டுக்கள், ஸ்டார்ட் மெனுவில் சேர்க்கப்பட்டு, மாறா நிலையில் இருக்கும்.

இவை தேவைப்படாதவர்கள், "இது எதற்கு ஸ்டார்ட் மெனுவில்?' என்று கவலைப்படுவார்கள். கேம்ஸ் வேண்டுமென்றால், ஆல் புரோகிராம்ஸ் சென்று, தேவையானதைத் தேர்ந்தெடுத்து இயக்கலாமே! என்று எண்ணுவார்கள். எனவே ஸ்டார்ட் மெனுவில் இருந்து இவற்றை நீக்கும் வழிகளை இங்கு காணலாம்.

விண்டோஸ் 7ல் இந்த விஷயத்தை நிறுத்த...!

ஸ்டார்ட் மெனு சென்று சர்ச் பாக்ஸில் %AllUsersProfile%\Microsoft\Windows\StartMenu\ என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது ஸ்டார்ட் மெனுவில் உள்ளவை லோட் செய்யப்படும். இந்த இடத்தில் தான், விண்டோஸ் 7 அனைத்து பயனாளர்களுக்குமான புரோகிராம்களின் ஷார்ட்கட் அமைப்பினைப் பதிந்து வைக்கிறது.

விண்டோஸ் 7 உங்களிடம் இந்த ஷார்ட்களை ஒருவருக்கா அல்லது அனைத்து பயனாளர்களுக்கும் வைத்துக் கொள்ளவா? என்று கேட்கும்.விண்டோஸ் கேம்ஸ்களுக்கான ஷார்ட்கட் அனைவருக்குமாக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் என்டர் தட்டியவுடன், விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும்.

இதில் "Programs" என்ற போல்டரில் டபுள் கிளிக் செய்திடவும். "All Programs" என்பதன் கீழ் உள்ள அனைத்து புரோகிராம்களும் பட்டியலிடப்படும். இதில் "Games" என்ற போல்டருக்குச் செல்லவும்.

அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் "Cut" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இந்த போல்டரை டெஸ்க்டாப் அல்லது டெஸ்க்டாப் உள்ளாக ஏதேனும் ஒரு போல்டருக்குள் வைக்கவும். இனி கேம்ஸ் போல்டர் விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனுவில் இனிமேல் கிடைக்காது.

Best Mobiles in India

English summary
this is the article about the how to hide windows unwanted things

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X