Home
Computer

கம்பியூட்டர் பாதிக்கப்பட்டால் இப்படி செய்யலாம்...!

By Keerthi

இன்றைக்கு விண்டோஸ் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்று, மால்வேர் அல்லது வைரஸினால், மிக மோசமாகப் பாதிக்கப்பட்டால், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இயக்குவதில் எந்த மாற்றமும், தீர்வும் கிடைக்காது.

ஏனென்றால், அந்த மால்வேர் அல்லது வைரஸ், முதலில் உங்கள் ஆண்ட்டி வைரஸ் இயக்கத்தினைத்தான் முடக்கும். சில மால்வேர் புரோகிராம்கள், தங்களை எந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும் கண்டறிய முடியாதபடி பதுங்கிக் கொள்ளும்.

சில, ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைச் சரியாகச் செயல்பட விடாமல் தடுக்கும். புதியதாக, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்திட முயன்றாலும், அது தடுக்கப்படும்.

எனவே, கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் சிஸ்டத்தினை வெளியே இருந்து இயக்கினால்தான், மால்வேர் புரோகிராமின் தாக்குதலில் இருந்து விடுபட முடியும். இதற்கான தீர்வுகளை, அவற்றைப் பெற நாம் மேற்கொள்ள வேண்டிய வழிகளை இங்கு காணலாம்.

சேப் மோட் என்ற வழி, விண்டோஸ் இயக்கத்திலிருந்து வெளியே இருந்து செயல்படும் வகை அல்ல. மால்வேர் ஒன்று, உங்கள் கம்ப்யூட்டரை மிகத் தீவிரமாகப் பாதித்திருந்தால், இந்த வழியில் அதனைச் சரி செய்திட முடியாது.

கம்பியூட்டர் பாதிக்கப்பட்டால் இப்படி செய்யலாம்...!

இந்த வகையில் பூட் செய்திட்டால், தர்ட் பார்ட்டி புரோகிராம் எதுவும் தொடக்கத்திலேயே இயங்காது. எனவே, சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்குகையில், மால்வேர் புரோகிராம் இயங்காது.

இந்த குறைந்த புரோகிராம்கள் இயங்கும் சேப் மோட் சூழ்நிலையில், நீங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்திடலாம். அதனைக் கொண்டு மால்வேர் இருப்பதனை ஸ்கேன் செய்து அறியலாம்.

அறிந்து அழிக்கலாம். கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் கொண்டு, மால்வேர் ஒன்றை அழித்த பின்னரும், மீண்டும் கம்ப்யூட்டர் பூட் ஆகும்போது, மால்வேர் தலைகாட்டுகிறது என்றால், சேப் மோடில் பூட் செய்து, கம்ப்யூட்டரைச் சரி செய்திட முயற்சிக்க வேண்டும்.

விண்டோஸ் 7 அல்லது அதற்கு முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களில், சேப் மோடில் நுழைய, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடத் தொடங்கியவுடன், F8 கீயை அடுத்தடுத்து தட்ட வேண்டும். கருப்பு திரையில் நெட்வொர்க்கிங் திரை காட்டப்பட்டு, எப்படி விண்டோஸ் தொடங்கப்பட வேண்டும் என்பதற்கு ஆப்ஷன்கள் காட்டப்படும்.

அதில் Safe Mode அல்லது Safe Mode with Networking என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தால், இணையத்திலிருந்து புதிய ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பெற்று, இன்ஸ்டால் செய்து, தொடர்ந்து அதனை இயக்கி, மால்வேர் புரோகிராம்களை நீக்கலாம்.

ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள், உங்கள் கம்ப்யூட்டரை பழுது பார்க்கவும், ஸ்கேன் செய்திடவும் பூட் டிஸ்க்குகளை உருவாக்கும் வழிகளைத் த்ருகின்றன. இந்த டூல்களை ஒரு சிடி அல்லது டிவிடியில் பதிந்து எடுத்துக் கொள்ளலாம். அல்லது யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

பின்னர், அதன் மூலம் கம்ப்யூட்டரை பூட் செய்தால், ஆண்ட்டி வைரஸ் நிலை ஒன்றில் கம்ப்யூட்டர் பூட் ஆகும். இதன் மூலம் கம்ப்யூட்டரை சரி செய்திடலாம். மால்வேர்களை நீக்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X