கம்பியூட்டர் ஹாங்கா! இதோ ஹாங்கில் இருந்து தப்பிக்க

|

நாம் கம்பியூட்டர் உபயோகிக்கும் போது திடீரென்று தன் கட்டுப்பாட்டை இழந்து இயக்கமேதுமற்று உறைந்து போகும் அல்லது நீலத் திரையில் வெள்ளை நிறத்தில் ஏதோ பிழை செய்திகளைக் காண்பிக்கும்.

அந்த நேரங்களில் நமக்கு கம்பியூட்டரரையே உடைத்து விடலாம் என்பது போல கோபம் நிச்சயம் வரும்.

இந்த இரு வகையான சிக்கலும் எல்லாக் கணினிப் பயனர்களும் வழக்கமாக எதிர்கொள்பவைதான்.

இந்த இரு சந்தர்ப்பங்களும் தவிர்க்க முடியாதவைதான் எனினும் சில விஷயங்களை கவனத்தில் கொண்டால் நிச்சயம் இவற்றைத் தவிர்க்கலாம்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் எவற்றையெல்லாம் செய்ய கூடாது, மேலும் அவற்றை எப்படி மீட்டெடுக்கலாம் என்பதை கீழே பார்ப்போம்......

Click Here For New Tablets Gallery

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

கம்பியூட்டர் உறைந்துவிட்டது என்பதை விண்டோஸ் இயங்கு தளம் பலவாறு திரையில் காண்பிக்கும். இவற்றுள் ஒரு எப்லிகேசன் நம் விருப்பப்படி செயற்படாமல் போவது ஒரு பொதுவான அறிகுறியாகும். எப்லிகேசன் விண்டோக்கள் மினிமைஸ் செய்தது போல் டாஸ்க் பாரில் ஒட்டிக்கொண்டிருக்கும் மறுபடி முன்னர் இருந்த நிலைக்கு விண்டோவைக் கொண்டுவர முடியாமலிருக்கும். மவுஸ் பொயிண்டர்(MOUSE POINTER) நகராமல் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதும் கம்பியூட்டர்உறைந்து விட்டது என்பதை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அறிகுறி.

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

சில வேளைகளில் This Program Performed an illegal operation and will be shut down அல்லது இந்த எப்லிகேசன் செயற்பட மறுக்கிறது. (Not Responding) போன்ற பிழைச் செய்திகளை விண்டோஸ் காண்பிக்கும். ஒரு எப்லிகேசன் செயற்பட மறுப்பதை விண்டோஸ் இவ்வாறு பல வழிகளில் காண்பிக்கும்.

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனேகமாக அந்த எப்லிகேசனை நிறுத்தி விடுமாறு அல்லது கணனி தானாக அந்த எப்லிகேசனை மறுபடி ஆரம்பிக்கும் வண்ணம் கேன்சல் செய்து விடுமாறு விண்டோஸ் பரிந்துரைக்கும்.

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

நீலத் திரை மரணம் (blue Screen of death) என்பது ஒரு வெளிப்படையான அறிகுறி நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிறத்தில் சில பிழைச் செய்திகளைக் காண்பிக்கும் இந்த நிலையை Crash க்ரேஷ் எனப்படுகிறது.

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

குறைபாடுகளுள்ள அல்லது ஒன்றோடொன்று ஒத்திசையாத வன்பொருள் சாதனங்கள், இயங்கு தளம், எப்லிகேசன் மென்பொருள் மற்றும் ட்ரைவர் மென்பொருள் போன்றவற்றில் ஏற்படும் வழுக்கள், மற்றும் கம்பியூட்டர்நினைவகத்தில் ஏற்றப்படும் அதிக சுமை என்பன கம்பியூட்டர் க்ரேஷ் ஆவதற்கும் ப்ரீஸ் ஆவதற்கும் முக்கிய காரணங்களாகும்.

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

இவற்றுள் நினைவகத்தில், அதிக சுமை ஏற்றுவது பொதுவான ஒரு காரணியாகும். கம்பியூட்டர் செயற்பட, போதுமான அளவு நினைவகம் அவசியம். இதனை RAM ரேம் அல்லது Random Access Memory எனப்படும். கம்பியூட்டர் ஒரு நேரத்தில் கையாளக் கூடிய அளவை விட மேலதிகமாக சுமை ஏற்றும்போது கம்பியூட்டர்தற்காப்பு நடவடிக்கையாக க்ரேஷ் ஆகிவிடுகிறது.

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

ஒன்றுக்கு மேற்பட்ட எப்லிகேசன்களை ஒரே நேரத்தில் இயக்க முற்படுவதே இவ்வாறு கம்பியூட்டர் உறைந்து விடுவதற்கான பொதுவான காரணமாகும். அதனால் நீங்கள் பயன்படுத்தாத எப்லிகேசனை நிறுத்தி விடுவது கணினியின் நினைவகச் சுமையைக் குறைத்துவிடும்.

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

சில எப்லிகேசன்களுக்கிடையிலான முரண்பாடுகளும் (Conflicts) கம்பியூட்டர் க்ரேஷ் ஆவதற்குரிய மற்றுமொரு காரணமாகும். ஏனைய எப்லிகேசன்களுடன் முரண்படும் மென்பொருள்களில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களும் அடங்கும்.

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

கம்பியூட்டர்எதிர்பாராத விதமாக க்ரேஷ் ஆகும்போது கணனியில் இயக்கமே நின்றுவிடும். கணனியைப் பழுது பார்க்கு முன்னர் கம்பியூட்டர் க்ரேஷ் ஆவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் கொள்வது நன்மை பயக்கும். கம்பியூட்டர் முறையாக ரீபூட் ஆகுமானால் ரெஜிஸ்ட்ரியில் (Registry) ஏதோ சிக்கலிருப்பது உறுதியாகிறது.

உடனடியாக ரீபூட் ஆக வில்லையானால் கணினியை சேப் மொடில் (Safe Mode) ரீபூட் செய்து ஒரு ரெஜிஸ்ட் க்லீனர் கொண்டு ரெஜிஸ்ட் ரியைப் பழுது நீக்கிக் கொள்ள வேண்டும்.

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

ஹாங்கில் இருந்து தப்பிக்க வழிகள்

விண்டோஸ் ஆரம்பிக்கு முன்னர் கீபோர்டில் எப். 8(F8) விசையை அழுத்துவதன் மூலம் கணினியை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும் என்ற மேனுவை வரவழைத்து சேப் மோடில் நுழையலாம்.

விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியிலிருக்கும் ஒவ்வொரு பைலும் கணனியிலுள்ள ஒவ்வொரு எப்லிகேசனுக்குமுரிய கட்டளைகளைக் கொண்டுள்ளன. அடுத்து என்ன செய்ய வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை ரெஜிஸ்ட்ரி பைல்களே கொண்டிருக்கும்.

இந்த ரெஜிஸ்ட்ரி பைல்கள் பழுதடையும் போது அல்லது இடம் மாறி விடும் போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற விவரம் தெரியாமல் கம்பியூட்டர் தடுமாறுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கம்பியூட்டர் தன் கட்டுப்பாட்டை இழந்து இறுதியில் க்ரேஷ் ஆகிவிடுகிறது.

சில மென்பொருள்களைப் புதிதாக நிறுவும் போது கூடகம்பியூட்டர் க்ரேஷ் ஆகலாம். அப்போது அந்த மென்பொருளை அகற்றி விடுவதே சிறந்த வழி.

இவ்வாறான சகந்தர்ப்பங்களில் முறையாக செயற்பட மறுக்கும் ஒரு எப்லிகேசளை டாஸ்க் மேனேஜரை (Task Manager) வரவழைப்பதன் மூலம் நிறுத்தி விடலாம். டாஸ்க் மேனேஜரை வரவழைக்க Ctrl+ Alt+ Delete விசைகளை ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும். செயற்பட மறுக்கும் எப்லிகேசன் பெயரை டாஸ்க் மேனேஜர் விண்டோவில் காண்பிக்கும். அதிலிருந்து உரிய எப்லிகேசனை தெரிவு செய்து End Task பட்டனில் க்ளிக் செய்வதன் மூலம் நிறுத்தி விடலாம்.

Click Here For New Smartphones Gallery

Most Read Articles
Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X