நீண்ட நேரம் கணினியை பயன்படுத்துகின்றீர்களா, அப்ப இதை படிங்க முதல்ல

Posted By:

கார்ப்பரேட் நிறுவனத்தில் காலை முதல் மாலை வரை கம்ப்யூட்டரையே பார்த்துக்கிட்டு இருக்கீங்களா, இதனாலேயே உங்களுக்கு கண்டிப்பாக கண் பார்வையில் பிரச்சனை இருக்குமே. இந்த பிரச்சனையை சரி செய்ய சில எளிய முறைகளை தான் இங்கு நாம் பார்க்க இருக்கின்றோம்.

நீண்ட நேரம் கணினியை பயன்படுத்துகின்றீர்களா, அப்ப இதை படிங்க முதல்ல

கண்களில் எரிச்சல் அல்லது தலைவலியோ ஏற்பட்டால் உங்கள் கண்ணகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். கண்களுக்கு ஓய்வு கொடுத்தும் இந்த பிரச்சனைகள் தொடர்ந்தால் ஸ்கிரீன் இடைவெளியை அதிகமாக்குங்கள்.

ஸ்கிரீனுக்கு நேராக அமருங்கள், அவை உங்கள் கண் பார்வைக்கு மேலாகவோ அல்லது கீழாகவோ இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம். கணினியின் ஸ்கிரீன் உங்கள் முகத்திற்கு நேராக இருக்கும் பட்சத்தில் பிரச்சனை குறைய ஆரம்பிக்கும். இதன் பின் 20 நிமிட இடைவெளியில் 20 அடி தூரத்தில் இருக்கும் பொருளை 20 வினாடிகள் தொடர்ந்து பார்க்க வேண்டும். இதை உங்களுக்கு நினைவூட்ட இணையத்தில் அப்ளிகேஷனும் உள்ளது.

நீண்ட நேரம் கணினியை பயன்படுத்துகின்றீர்களா, அப்ப இதை படிங்க முதல்ல

பார்வையை பாதுகாத்து கொள்ளுங்கள்
இணையதளத்தில் 'ப்ரொடெக்ட் யுவர் விஷன்' என்ற தளம், அலாறம் போன்று 20 நிமிட இடைவெளியில் உங்களுக்கு நினைவூட்டுவதோடு அதில் இருக்கும் பாவனைகளை செய்வது கண்களுக்கு ஓய்வை கொடுக்கும்.

நீண்ட நேரம் கணினியை பயன்படுத்துகின்றீர்களா, அப்ப இதை படிங்க முதல்ல

அடுத்து ப்ளக்ஸ் மென்பொருளையும் பயன்படுத்தலாம், இதை உங்கள் கணினியில் ஏற்றிவிட்டால் அது உங்கள் கணினியின் டிஸ்ப்ளே தோற்றத்தை மாற்றி கண்களுக்கு ஏற்ற வெளிச்சத்தை பிரதிபலிக்கும். இது பார்க்க உறுத்தலாக இருந்தாலும் உங்கள் கண்களுக்கு நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

Read more about:
English summary
Steps to prevent eye strain while using computer for long time
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot