இண்டர்நெட் எக்ஸ்புளோருக்கு சுத்தம் முக்கியம்

By Keerthi
|

நீங்கள் பயன்படுத்தும் பிரவுசரை அடிக்கடி நீங்கள் அடிக்கடி சுத்தம் செய்திட வேண்டும்.

உங்கள் தனிநபர் தகவல்களைப் பாதுகாக்கவும், பிரவுசரின் செயல் திறன் குறைந்திடாமல் பார்த்துக் கொள்ளவும் சுத்தப்படுத்துதல் முக்கியமாகும்.

இங்கு அதிகம் பயன்படுத்தப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைச் சுத்தம் செய்வதற்கென கிடைக்கும் சில புரோகிராம்கள் குறித்து பார்க்கலாம்.

இண்டர்நெட் எக்ஸ்புளோருக்கு சுத்தம் முக்கியம்

1. சிகிளீனர்:
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மட்டுமின்றி, அனைத்து பிரவுசரின் தேவையற்ற பைல்களை நீக்கிடும் பிரபலமான புரோகிராம் சிகிளீனர். ரெஜிஸ்ட்ரியைச் சரி செய்வது, புரோகிராம்களை கம்ப்யூட்டரின் பதிவிலிருந்து முழுமையாக நீக்க்குவது போன்ற செயல்களையும் இது மேற்கொள்ளும்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இது நாம் குறிப்பிடும் குக்கி பைல்களை மட்டுமே நீக்கும். அந்த ஆப்ஷனை நமக்குத் தருகிறது.

2. ப்ரீ இன்டர்நெட் எரேசர்:
விண்டோஸ் சிஸ்டம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் ஏற்படுத்தும் நம் இணைய தடங்களை, முழுமையாக நீக்கும் புரோகிராம் இது. பிரவுசிங் ஹிஸ்டரி, தற்காலிக இன்டர்நெட் பைல்கள், குக்கிகள் போன்றவற்றை இது நீக்குகிறது.

இதன் ஒரு சிறப்பம்சம், இதன் செயல்பாட்டினைக் கால வரையறையுடன் செட் செய்திடலாம். அழிக்கப்பட்ட பைல்களை முழுமையாகக் கம்ப்யூட்டர் சிஸ்டத்திடம் இருந்து நீக்க வேண்டுமெனில், கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

3. சிஸ்டம் அண்ட் இன்டர்நெட் வாஷர் ப்ரோ:

இன்டர்நெட் பிரவுசர் ஏற்படுத்தும் வெப் பிரவுசர் ஹிஸ்டரி, பிரவுசர் ஏற்படுத்தும் தற்காலிக பைல்கள் மற்றும்குக்கீஸ் புரோகிராம்களை மிக எளிதாக நீக்கும் புரோகிராம். இதில் விண்டோஸ் சிஸ்டத்திற்கான கிளீனர் தொகுப்பும் உள்ளது.

ஒரு பாப் அப் பிளாக்கரும் தரப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு வசதிக்கான செயல்பாடும் தனித்தனி டேப்களில் காட்டப்படுகிறது இதன் மூலம் நாம் எவற்றை நீக்க விரும்புகிறோமோ, அவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நீக்கலாம்.

இதன் இன்னொரு சிறப்பு, இதில் உள்ள டிஸ்க் டேப். இதனைத் தொடுவதன் மூலம், ஹார்ட் டிஸ்க்கில் உள்ள அழிக்கப்பட்ட பைல்கள், நிரந்தரமாக நீக்கப்படுகின்றன.

இந்த புரோகிராமைப் பொறுத்த வரை உள்ள சிக்கல் என்னவென்றால், இதனைப் பெற 34.95 டாலர் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆனால், 15 நாட்களுக்கு தொடக்கத்தில் இலவசமாகச் செயல்படுத்திக் கொள்ளலாம்.

4. ரியல் டைம் குக்கி அண்ட் கேஷ் கிளீனர்:

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைச் சுத்தப்படுத்தும் புரோகிராம்களில் இது சற்று வித்தியாசமானது. நீங்கள் இன்டர்நெட் பிரவுசர் வழியாக பிரவுஸ் செய்திடும் போதே, அதில் உள்ள தேவையற்ற பைல்களை நீக்கவும் செய்திடலாம். இதனால், பிரவுசிங் வேகம் மற்றும் செயல் திறன் பாதிக்கப்படாது.

5. ட்ரேக்ஸ் எரேசர் ப்ரோ:

சில அடிப்படை கிளீனிங் வேலைகளுக்கும் மேலாக, மேலும் சில செயல்பாடுகளை இந்த புரோகிராம் மேற்கொள்கிறது. இது பயர்பாக்ஸ், குரோம் மற்றும் சில பிரவுசர்களிலும் செயல்படுகிறது. பைல்களை நீக்கும் முன், சோதனையாகச் சிலவற்றை நீங்கள் நீக்கிப் பார்க்கலாம்.

இதில் பைல் ஷ்ரெடர் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு பைலையும் அதன் மிச்சம் மீதி இல்லாமல், சுத்தமாக நீக்கிவிடலாம்.

அதைக் காட்டிலும் இன்னும் ஒரு சிறப்பம்சம் இதில் தரப்பட்டுள்ள பாஸ் கீ (boss key). இதனைப் பெற 29.95 டாலர் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இருப்பினும் 30 நாட்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X