கணினியுடன் ஆன்டிராய்டு போனை இணைப்பது எப்படி, தெரிந்து கொள்ளுங்கள் இப்படி
ஆன்டிராய்டு போனில் இடம் இல்லையா, அதில் இருக்கும் தகவல்களை கணினிக்கு மாற்ற சிரமமாக இருக்கின்றதா, அப்ப உங்க ஆன்டிராய்டு போனை கணினியோடு இனைத்திடுங்கள். எப்படி செய்வதென்று தெரியவில்லையா. அது ஒன்னும் பெரிய வேலையே இல்லைங்க. அப்பறம் எப்படி செயவ்தென்று கேட்கின்றீர்களா, உங்க ஆன்டிராய்டு போனை கணினியோடு இனைப்பது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க. காமெடி போட்டோ கலெக்ஷன்

1
முதலில் உங்க ஆன்டிராய்டு போனை ப்ளூடூத் மூலம் கணினியோடு இனைக்கலாம், அதற்கு முதலில் உங்க கணினியில் ப்ளூடூத் உள்ளதா என்று பாருங்கள், இல்லாத பட்சத்தில் ப்ளூடூத்தை கணினியில் பொருத்துங்கள்

2
உங்க கணினியின் கண்ட்ரோல் பேனல் செல்லுங்கள்

3
அங்கு ப்ளூடூத் டிவைஸை தேர்வு செய்யுங்கள்

4
உங்க போனின் ப்ளூடூத்தை ஆன் செய்யுங்கள்

5
ஒரு வேலை உங்க போன் டிடெக்ட் ஆகவில்லை என்றால் உங்க போனின் ப்ளூடூத் விஸிபிள் ஆப்ஷனில் உள்ளதா என்பதை செட்டிங்ஸ் - ப்ளூடூத் சென்று சரி பாருங்கள்

6
உங்க டிவைஸ் டிடெக்ட் ஆன பின் கணினியில் க்ளிக் செய்யுங்கள்

7
பாதுகாப்பு காரணங்களுக்காக கணினியில் பின் நம்பரை கொடுங்கள்

8
கணினியில் கொடுத்த பின் நம்பரை உங்க மொபைல் போனிலும் கொடுங்கள்

9
இப்போது உங்க போன் கணினியில் தெரியும், அதை தேர்வு செய்து உங்களுக்கு தேவையான தகவல்களை ப்ளூடூத் மூலம் அனுப்புங்கள்


Click it and Unblock the Notifications