கணினிக்கு பவர் சப்ளை யூனிட் வாங்குகிறீர்களா? கவனிக்க வேண்டிய அம்சங்கள்.!

பவர் சப்ளை யூனிட்களை எப்போதும் பிரபல உற்பத்தியாளர்களிடம் மட்டுமே வாங்கவேண்டும். அவ்வாறு வாங்குவதற்கு முன்பு அதன் ரிவீயூக்களை பார்க்க வேண்டும்.

|

உங்கள் கணினியிலேயே மிகவும் தரக்குறைவான பொருள் என்னவென்று பார்த்தால், நிச்சயம் அது பவர் சப்ளை யூனிட்டாகத் தான் இருக்கும். அதிக வாட் இருந்தால் சிறந்த பவர் சப்ளை கிடைக்கும் என நினைத்துக்கொண்டு, சிலர் பவர் சப்ளை யூனிட் வாங்கும் போது வாட் அம்சத்தை மட்டுமே கவனத்தில் கொள்கின்றனர். ஒரு சிலரோ பவர் யூனிட் வாங்கும் போது எதையுமே கவனிக்காமல் பொத்தாம்பொதுவாக வாங்கிவிடுகின்றனர்.

கணினிக்கு பவர் சப்ளை யூனிட் வாங்குகிறீர்களா? கவனிக்க வேண்டிய அம்சங்கள்

ஆனால் இந்த பவர் சப்ளை யூனிட்கள் கணினியின் நிலைத்தன்மை மற்றும் செயல்திறனை பாதிக்கும் என தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பவர் சப்ளை யூனிட்டுக்கு குறைந்த அளவே முக்கியத்துவம் அளித்தாலும், அது தான் கணிணியின் முக்கிய பாகம் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த பதிவின் மூலம் உங்கள் கணினிக்கான சிறந்த பவர் சப்ளை யூனிட்டை எப்படி தேர்வு செய்வது எனப் பார்ப்போம்.

பிராண்டேடாக வாங்குங்கள்

பிராண்டேடாக வாங்குங்கள்

பவர் சப்ளை யூனிட்களை எப்போதும் பிரபல உற்பத்தியாளர்களிடம் மட்டுமே வாங்கவேண்டும். அவ்வாறு வாங்குவதற்கு முன்பு அதன் ரிவீயூக்களை பார்க்க வேண்டும். பிரபல உற்பத்தியாளரிடம் வாங்கும் போது மட்டும் தான் சிறந்த தரத்துடன் உத்திரவாதமும் (வாராண்டி)கிடைக்கும்.

பவர் அவுட்புட்டை சரிபாருங்கள்

பவர் அவுட்புட்டை சரிபாருங்கள்

பவர் சப்ளை யூனிட் வாங்கும் போது கொடுக்கும்அதன் தகவல் பிரிவில் பவர் அவுட்புட் எவ்வளவு என சரிபாருங்கள். பெரும்பாலும் இது வாட் அளவீடுகளில் தரப்பட்டிருக்கும். ஆனால் நமக்கு அதிகபட்ச பவர் அவுட்புட் தேவையில்லை, தொடர்ந்து சீராக கிடைக்கும் அவுட்புட் தான் தேவை. எனவே அதிகபட்ச அளவை பார்த்து வாங்குவதை காட்டிலும் நீண்ட நேரம் தாக்குபிடிக்குமா என பார்த்து வாங்கவேண்டும்.

  திறனுள்ள பி.எஸ்.யூ-ஐ தேர்ந்தெடுங்கள்

திறனுள்ள பி.எஸ்.யூ-ஐ தேர்ந்தெடுங்கள்

சிறந்த திறனுள்ள பவர் சப்ளை யூனிட் தேர்வு செய்வதன் மூலம் பின்வரும் நன்மைகள் கிடைக்கும்.

° சிறந்த பாகங்கள்

°குறைந்த மின் சேதம்

°குறைந்த வெப்ப வெளியேற்றம்

°குறைந்த சப்தம்

வாங்குவதற்கு முன்பு திறன் மதிப்பீட்டை கவனிக்க வேண்டும். திறன் மதிப்பீடு 80% என்றால், 80% மின்சாரம் கணிணிக்கு வழங்கப்படும் மீதம் வெப்பமாக வீணாகும். எனவே 80% க்கு அதிக மதிப்பீடு பெற்ற பவர் சப்ளை யூனிட்டை வாங்குங்கள்.

சிங்கள் ரெயில் அல்லது மல்டி ரெயில்

சிங்கள் ரெயில் அல்லது மல்டி ரெயில்

உண்மையை சொல்லப்போனால், சிங்கள் ரெயில் அல்லது மல்டி ரெயில் இரண்டும் ஒரே செயல்திறனையே அளிக்கவல்லன. இரண்டும் மிகவும் பாதுகாப்பானவை மற்றும் சிறந்தவை. உங்களுக்கு மேலும் பாதுகாப்பு தேவைப்படின், மல்டி ரெயில் ஓ.சி.பி மூலம் உங்கள் கணிணியை சார்ட் சர்க்யூட்டிலிருந்து பாதுகாக்கலாம்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
ஹார்டு ஒயர்டு கேபிள் அல்லது முழு மாடுலர் கேபிள்?

ஹார்டு ஒயர்டு கேபிள் அல்லது முழு மாடுலர் கேபிள்?

தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால், ஹார்டு ஒயர்டு கேபிள் பயன்படுத்துவதன் மூலம் கனெக்டர் மற்றும் பவர் சப்ளை யூனிட் இடையை கூடுதல் இணைப்பை தவிர்க்கலாம். முழு மாடுலர் கேபிள் சிறந்ததாக தோன்றினாலும், ஹார்டு ஒயர்டு கேபிள் உங்களுக்கான பணியை செய்கிறது.

நீங்கள் பவர் சப்ளை யூனிட் வாங்கும் போது இந்த அம்சங்களை நினைவில் வைத்துக்கொண்டு உங்கள் கணிணிக்கான சிறந்த பவர் சப்ளை யூனிட் தேர்ந்தெடுங்கள்.

Best Mobiles in India

English summary
How to buy the best Power Supply Unit (PSU) for your PC; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X