தொழில்நுட்ப ஊழல்களில் சிக்காமல் இருக்க தலைசிறந்த டிப்ஸ்.!

டெக் துறையை நன்கு அறிந்த தீயவர்கள் தினந்தோரும் புதிய மற்றும் பலராலும் கண்டறிய முடியாத வழிகளில் தனிப்பட்ட தகவல்களை திருட முயன்று வருகின்றனர்.

|

தொழில்நுட்ப ஊழல்கள் என்றதும் உடனே ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் நினைவுக்கு வருகிறதா? இணைய உலகில் நம் தகவல்களின் பாதுகாப்பு, அந்தரங்க தகவல்கள் மற்றும் நாம் கற்பைனையிலும் நினைக்காத பல்வேறு வழிகளில் அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன.

டெக் ஊழல்களில் இருந்து தப்பிக்க டிப்ஸ்.!


அந்த வகையில் மைக்ரோசாஃப்ட்-இல் இருந்து அழைக்கிறோம் என்ற பெயரில் உங்களுக்கு ஒரு அழைப்பு வரும், உங்களது கணினியில் அதி தீவிரமான பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்ற தகவல் தெரிவிக்கப்படும். இதை சரி செய்வதாக கூறி உங்களின் கிரெடிட் கார்டு நம்பர் மற்றும் உங்களின் கம்ப்யூட்டர் மூலம் அவர்களுக்கு தேவையானவற்றை அபகரித்து கொள்வர்.

வளர்ந்து வரும் இணைய உலகில் இதுவும் ஒருவித அச்சுறுத்தல் தான் என மைக்ரோசாஃப்ட் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக் துறையை நன்கு அறிந்த தீயவர்கள் தினந்தோரும் புதிய மற்றும் பலராலும் கண்டறிய முடியாத வழிகளில் தனிப்பட்ட தகவல்களை திருட முயன்று வருகின்றனர்.

இதுபோன்ற ஊழல்களில் சிக்காமல், இணைய உலகில் பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ்களை தொடர்ந்து பார்ப்போம்..

டெக் ஊழல்களில் இருந்து தப்பிக்க டிப்ஸ்.!


ஃபிஷிங் மின்னஞ்சல்களை கண்டறிவது எப்படி?
இணைய ஊழல்களின் ஆதிகால ஐடியாக்களில் ஒன்றாக ஃபிஷிங் இமெயில்கள் உள்ளன. இவை மிகவும் எளிமையானகவும், அதிக செலவும் எடுத்துக் கொள்ளாது. இத்துடன் ஹேக்கர்களுக்கு சாதுவாக அதிக பலன்களை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

எடுத்துக்காட்டாக உங்களது வங்கி கணக்கு தகவல்களுக்கு ஆபத்து என்ற தலைப்பில் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். இத்துடன் உடனடியாக உங்களின் பாஸ்வேர்டை மாற்றக்கோரும் தகவலும் இந்த மின்னஞ்சலில் இடம்பெற்றிருக்கும்.

இதை பார்த்ததும் உடனடியாக நீங்களும் கிளிக் செய்து, உங்களின் வங்கி கணக்கு அடங்கிய அக்கவுண்ட்-ஐ லாக் இன் செய்து புதிய பாஸ்வேர்டினை மாற்றிவிடுவீர்கள். இங்கு நீங்கள் கிளிக் செய்தது போலி மின்னஞ்சல் என்றும் உங்களது புதிய பாஸ்வேர்டினை ஹேக்கர்கள் திருடிவிட்டது உங்களுக்கு ஆபத்து ஏற்படும் வரை தெரியாமலே இருக்கும்.

இதுபோன்ற மின்னஞ்சல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உங்களுக்கு உற்ற நண்பன் உங்களின் பொது அறிவு மட்டுமே. இது போன்ற மின்னஞ்சல்களை இனி உங்களின் இன்பாக்ஸ் இல் படிக்க நேர்ந்தால், இவற்றை படிக்காமல் அப்படியே அழித்து விடுவது உங்களை பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.

டெக் ஊழல்களில் இருந்து தப்பிக்க டிப்ஸ்.!


அழைப்பில் அதிக கவனம் தேவை
முந்தைய வழிமுறையில் குறிப்பிட்டதை போன்று மைக்ரோசாஃப்ட் சார்பில் இது போன்ற எவ்வித அழைப்புகளும் எந்நேரத்திலும் வராதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை உங்களின் ஜிபிஎஸ் மற்றும் ப்ரின்டர் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும். இது போன்ற பிரச்சனை ஏற்பட்டால் பாதிக்கப்பட்டோர் தொடர்பு கொள்வர் என நிறுவனங்களுக்கு தெரியும்.

அடுத்த முறை மைக்ரோசாஃப்ட் அல்லது மற்ற நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வந்தால் கவனமாக செயல்பட வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற அழைப்புகள் வரும் பட்சத்தில் இது குறித்து குறிப்பிட்ட நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

பாப்-அப்களை தவிர்க்கவும்
மால்வேர்கள் உங்களின் கம்ப்யூட்டரை தாக்க நினைத்தால், முதலில் உங்கள் திரை முழுக்க பாப்-அப்கள் தோன்றும். வழக்கமான விண்டோஸ் நோட்டிஃபிகேஷன்களை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும் பாப்-அப்கள் உங்களது கம்ப்யூட்டர் பாதிக்கபப்ட்டுள்ளது, மொபைல் நம்பரை வழங்கி உதவியை பெறுங்கள் என்ற தகவல்களை வழங்கும்.

இவ்வாறு வரும் பாப்-அப்களை தவிர்க்கவும், வார்னிங் மெசேட்களில் போன் நம்பர் இடம்பெறாது. இதனால் குறிப்பிட்ட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ எண்களை தவிர மற்ற எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள வேண்டாம்.

பாஸ்வேர்டு மேனேஜர் பயன்படுத்தலாம்

ஒரே பாஸ்வேர்டுகளை பல்வேறு கணக்குகளில் பயன்படுத்தினால், இவற்றை ஹேக்கர்கள் மிக எளிமையாக கண்டறிந்து விடுவர். இதனால் வெவ்வேறு பாஸ்வேர்டுகளை பயன்படுத்த பாஸ்வேர்டு மேனேஜர் போன்ற சேவைகளை பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
How to avoid tech support scams; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X