Home
Computer

15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம்.!

ஹானர் நிறுவனம் சீனாவில் ஹானர் மேஜிக்புக் 15 என்ற லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்தியாவில் ஹானர் மேஜிக்புக் 15 சாதனம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 1920 x 1080 பிக்சல்

1920 x 1080 பிக்சல்

ஹானர் மேஜிக்புக் 15 மாடல் 15.6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

 16ஜிபி ரேம்

இந்த லேப்டாப் மாடல் 10 வது தலைமுறை இன்டெல் கோர் ஐ7 உடன் என்விடியா எம்எக்ஸ் 250 ஜி.பீ.யு மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர்  மேஜிக்புக் 14

மேலும் ஹானர் மேஜிக்புக் 15 மாடல் விண்டோஸ் 10 ஹோம் எடிஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது, பின்புஹானர் மேஜிக்புக் 14 மாடலை விட சிறந்த வேகம் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு இந்த
லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

இந்த லேப்டாபில் வைஃபை (2.4GHz மற்றும் 5GHz), புளூடூத் 4.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட், யுஎஸ்பி 3.0 டைப்-ஏ, எச்டிஎம்ஐ போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

 1.53கிலோ எடை

1.53கிலோ எடை

ஹானர் மேஜிக்புக் 15 மாடலில் 42வாட் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 1.53கிலோ எடை கொண்டு வெளிவந்துள்ளதால் எளிமையாக பயன்படுத்தலாம். அதேசமயம் இந்த லேப்டாப் மாடலுக்கும் 65வாட் பவர் அடாப்டர் வழங்கப்பட்டுள்ளது.

ஹானர்  மேஜிக்புக் 15

ஹானர் மேஜிக்புக் 15 மாடலின் ஆரம்ப விலை 4899யுவான் (இந்திய மதிப்பில் ரூ.49,719-ஆக உள்ளது). விரைவில் இந்தலேப்டாப் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Honor MagicBook 15 with 10-gen Intel Core processors announced : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X