புத்தாண்டு பரிசாக லெனோவா அறிமுகப்படுத்தும் லேப்டாப்

By Super
|

புத்தாண்டு பரிசாக லெனோவா அறிமுகப்படுத்தும் லேப்டாப்
தனது எக்ஸ் வரிசை திங்க்போட் லேப்டாப்புகள் மூலம் லெனோவா நிறுவனம் கணினி சந்தையின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தது. இந்த எக்ஸ் வரிசை லேப்டாப்புகள் லெனோவாவிற்கு மிக அபாரமான வெற்றியை அளித்தன. இதில், முக்கியமானவை எக்ஸ்100இ, எக்ஸ்120இ மற்றும் எக்ஸ்121இ லேப்டாப்புகளாகும். அந்த வரிசையில் புதிதாக இப்போது லெனோவா எக்ஸ்130இ லேப்டாப் இணைகிறது.

எக்ஸ் வரிசை லேப்டாப்புகள் அல்ரா போர்ட்களுக்கும் மற்றும் மலிவு விலைக்கும் பெயர் பெற்றவை. அவை மலிவு விலையில் வந்தாலும் வசதிகள் மற்றும் தொழில் நுட்பங்களில் குறை வைத்ததில்லை. இந்த எக்ஸ்130இ லேப்டாப் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அதைப் பற்றிய தகவல்கள் இணையதளங்களில் மிக அதிகமாகவே வருகின்றன.

இணையதளத்தில் வந்த இந்த லேப்டாப்பின் படத்தின் படி எக்ஸ் 130இ மிக உறுதியாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும் இதன் கீபோர்ட் மிக வலிமயானது. மேலும் இது ரப்பர் உறையால் மூடப்பட்டுள்ளது. இது கீழே விழுந்தாலும் அதிக சேதம் ஆகாது.

எக்ஸ்130இ லேப்டாப் 11.6 இன்ச் திரையுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்ப்ளேயின் ரிசலூசன் 1366 x 768 ஆக இருக்கும் என்று நம்பலாம். இதன் பழைய லேப்டாப்புகளின் டிஸ்ப்ளே ரிசலூசன் மிக அருமையாக இருக்கின்றன. இதனால் ரிசலூசனும் மிக அருமையாக இருக்கும் என நம்பலாம்.

எக்ஸ்130இன் எடை 1.8 கிலோவாகும். இதன் பழைய எக்ஸ் வரிசை லேப்டாப்புகள் 11.1வி மற்றும் 5.16எஎச் சக்தி கொண்ட 6 செல் பேட்டரியைக் கொண்டிருந்தன. இந்த புதிய லேப்டாப் அதைவிட அதிக சக்தி கொண்ட பேட்டரியை கொண்டிருக்கும் என நம்பலாம். மேலும் இதன் பேட்டரி பேக்கப் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எக்ஸ்130இ லேப்டாப்பின் செயல் திறன் ஒரு நெட்புக்கின் செயல் திறனை விட 132% அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ப்ராசஸர் பற்றி தகவல் கிடைக்கவில்லை. இது மலிவு விலையில் வருவதால் ஐ3 அல்லது ஐ5 ப்ராசஸர் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். மேலும் இது 4ஜிபி இன்பில்ட் ரேமைக் கொண்டிருக்கும்.

மேலும் இந்த லேப்டாப் 320ஜிபி ஹார்ட் டிஸ்க் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. க்ராபிக்ஸ் வசதிகளுக்காக இது எச்டி க்ராபிக்ஸ் 3000 ஜிபியு பிராசஸரை கொண்டிருக்கலாம். அதனால் இதன் க்ராபிக்சின் வேகம் 950 மெகா ஹர்ட்ஸாக இருக்கும்.

இந்த லேப்டாப்பின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த லேப்டாப் வரும் டிசம்பர் அல்லது புத்தாண்டு தொடக்கத்தில் மார்க்கெட்டிற்கு வரும் என நம்பலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X