Home
Computer

வீடியோ கேம், கிராபிக்சில் கலக்கும் புதிய லேப்டாப்!

By Karthikeyan
வீடியோ கேம், கிராபிக்சில் கலக்கும் புதிய லேப்டாப்!

சமீபத்தில் ஆரிஜின் நிறுவனம் தனது புதிய உயர்தர மற்றும் கேமிங் லேப்டாப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய லேப்டாப்புகள் இயோன் 15-எஸ் மற்றும் இயோன் 17-எஸ் என்று அழைக்கப்படுகின்றன. மற்ற லே்படாப்புகளைப் பார்க்கும் போது இந்த லேப்டாப்புகள் மிகக் குறைந்த விலையி்ல வருகின்றன. அதனால் இந்த லேப்டாப்புகள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் என நம்பலாம்.

இந்த இரண்டு லேப்டாப்புகளும் சில பொதுவான தொழில் நுட்பங்களைக் கொண்டு வருகின்றன. அதாவது இந்த இரண்டு லேப்டாப்புகளும் 6.5 மணி நேர இயங்கு நேரத்தைக் கொண்டிருக்கின்றன. அடுத்ததாக சூப்பரான க்ராபிக்ஸ் வசதி, வண்ணமாயமான பேக்லிட் கீபோர்டு, ஜிடிஎக்ஸ் 660எம் என்விடியா ஜிஇபோர்ஸ், இன்டல் எச்எம்77 ஐவி பிரிட்ஜ் சிப்செட் மற்றும் 5.1 ஆன்கியோ சவுண்ட் சிஸ்டம் என இந்த இரண்டு லேப்டாப்புகளும் அமர்க்களப்படுத்துகின்றன.

இயோன் 15-எஸ் லேப்டாப்பின் சிறப்புகளைப் பார்க்கும் போது இது 1920 x 1080 பிக்சல் ரிசலூசன் கொண்ட 15.6 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இதன் ப்ராசஸரின் வேகம் 2.5 ஜிஹெர்ட்ஸ் ஆகும். இதன் எடை 6.8 எல்பி மட்டுமே.

அதே நேரத்தில் இயோன்17-எஸ் லேப்டாப் 1920 x 1080 பிக்சல் ரிசலூசனுடன் 17.3 இன்ச் திரையுடன் வருகிறது. இந்த லேப்டாப்பும் 2.5 ஜிஹெர்ட்ஸ் வேகம் கொண்ட ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. இதன் ரேம் 4 ஜிபி ஆகும். இதன் எடை 8.6 மட்டுமே.

இந்த இரண்டு லேப்டாப்புகளுமே கேமிங் லேப்டாப்புகளாகும். இதன் கீபோர்டு, தொடுதளம் மற்றும் மவுஸ் ஆகியவை கேமிங் விளையாடுவதற்கு சூப்பராக உள்ளன. இவை ரேபிட் ஸ்டார்ட் தொழில் நுட்பத்தைக் கொண்டிருப்பதால் இதன் வேகம் பட்டையைக் கிளப்பும். அதாவது மின்னலைவிட அதிகமாக இருக்கும்.

அதனால் கேமிங் மற்றும் க்ராபிக்ஸ் வேலைகளை இந்த லேப்டாப்பில் மிக சூப்பராக செய்ய முடியும். மேலும் இவற்றில் டிஎச்எக்ஸ் ட்ரூஸ்டூடியோ ப்ரோ உள்ளதால் கேமிங் விளையாடும் போது இவை அதிரடியான ஒலியை எழுப்பும். இவற்றின் விலை ரூ.80000க்குள் இருக்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X