ஜி மெயிலில் இருக்கும் சில விஷயங்கள்...!
இன்றைக்கு கூகுள் தரும் ஜிமெயிலில் உள்ள கடிதங்களில், பல வேளைகளில் நாம் சில மெயில்களைத் தேடிப் பெற வேண்டியதிருக்கும்.
குறிப்பிட்ட நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற மெயில்கள், குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட மெயில்கள், சில சொற்கள் அடங்கிய மெயில்கள், சில தலைப்புகளில் வந்த மெயில்கள் எனப் பலவகைகளில் நாம் தேடலை மேற்கொண்டு தகவல் விடைகளைப் பெற முயற்சிப்போம்.
நாம் தேடுகையில் அதற்கான பல வரையறைச் சொற்களைப் பயன்படுத்தி, நம் தேடல்களின் முடிவுகளை விரைவாகப் பெறலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
from: குறிப்பிட்ட நபரிடமிருந்து வந்துள்ள மெயில்களை மட்டும் பெற.
to:நாம் அனுப்பிய மெயில்களில், குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட மெயில்களை மட்டும் காட்ட.
subject: மெயில்களில் உள்ள சப்ஜெக்ட் கட்டத்தில் உள்ள சொற்களில் தேடிப் பெற. எ.கா.subject:dinner சப்ஜெக்ட் வரியில் உள்ள சொற்களில் "dinner" என்ற சொல் உள்ள மெயில்களை மட்டும் காட்ட.

#1
OR:இரண்டு சொற்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அதனைத் தேடி, அச்சொல் உள்ள மெயில்களை மட்டும் காட்ட.

#2
hyphen: குறிப்பிட்ட சொல் உள்ள கடிதங்களைக் காட்டாமல் இருக்க.

#3
label: குறிப்பிட்ட ஒரு லேபில் கொண்ட கடிதங்களில் மட்டும் தேட. எ

#4
label: குறிப்பிட்ட ஒரு லேபில் கொண்ட கடிதங்களில் மட்டும் தேட. எ

#5
list: குறிப்பிட்ட மெயிலிங் லிஸ்ட்டில் இருந்து பெற்ற மெயில்கள் மட்டும்.

#6
" "(மேற்கோள் குறிகள்): இந்த குறிகளுக்குள் இடப்பட்ட டெக்ஸ்ட் உள்ள மெயில்கள் மட்டும் காட்டப்பட.

#7
after:before: குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்பப்பட்ட மெயில்களைக் காட்டு என்பது இதன் பொருள்.

#8
is:chat: இந்தக் கட்டளை சேட் மெசேஜ்களில் மட்டும் தேடலுக்காகப் பயன்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications