ஹெர்குலிஸ் வழங்கும் ஸ்டூடியோ மானிட்டர்

Posted By: Staff

ஸ்டூடியோ மானிட்டர்கள் சாதாரண மானிட்டர்களை விட அதன் ட்ராக்குகளை சரியான முறையில் வழங்குகின்றன. குறிப்பாக தொழில் முறையில் இந்த ஸ்டூடியோ மானிட்டர்கள் ஸ்டூடியோ காரணங்களுக்காக பரிந்துரைக்கப் படுகின்றன.

குறிப்பாக எம் ஆடியோ, பிஹரிங்கர், மேக்கீ மற்றும் போஸ்டெக்ஸ் போன்ற நிறுவனங்கள் ஸ்டூடியோ மானிட்டர்களை தயாரிப்பதில் மிக முன்னனியில் இருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது ஹெர்குலஸ் நிறவனமும் அந்த துறையில் நுழைந்து புதிய ஹெர்குலஸ் எக்ஸ்பிஎஸ் 2.0 80 டிஜே மானிட்டர்களை தயாரிக்க இருக்கின்றது.

குறிப்பாக ஹெர்குலஸ் மேசை கனணிகளின் ஆடியோ வசதியை மேம்படுத்துவதில் மிக அக்கறை காட்டுகின்றது. அதனால் அதற்காக மரத்தால் செய்யப்பட்ட பெரிய ஸ்பீக்கர்களை வழங்குகிறது. இந்த ஸ்பீக்கர்கள் மிக அழகாக இருக்கின்றன.

இதன் பிரீக்வன்சிகள் மிகப் பிரமாதமாக இருக்கும். இது ஸ்டீரியோ ஆர்சிஎ இன்புட்டுகளையும் 1/4 இன்ச் டிஆர்எஸ் இன்புட்டுகளையும் சப்போர்ட் செய்யும். ஆனால் இதில் எக்ஸ்எல்ஆர் இன்புட் இருக்காது.

இதன் கண்ட்ரோல் கீகள் இதன் கீழ் பக்கத்தில் வலது புறத்தில் உள்ளன. அதே போல் 1/8 ஹெட்போன் அவுட்புட்டையும் கொண்டுள்ளது. குறிப்பாக இதை எல்லா ஆடியோ டிவைஸ்களிலும் மற்றும் மிக்ஸர் டிவைஸ்களிலும் இதை பயன்படுத்த முடியும்.

இதன் மானிட்டர்கள் 40 வாட்ஸ் ஆர்எம்எஸ் ஆம்ப்ளிபயர் கொண்டிருப்பதால் இது 80 வாட்ஸ் மின்திறனிலும் சிறப்பாக இயங்கும். மேலும் இது ஒரு யூசர் பிரண்ட்லி ஆகும். இதன் விலையும் மிகக் குறைவே.

குறிப்பாக தொழில்முறை இசைத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த டிவைஸ்கள் கண்டிப்பான தேவையாக இருக்கும். இது எல்லாவிதமான ஸ்டூடியோ ஆடியோ தேவைகளையும் பூர்த்தி செய்யும். இந்த ஹெர்குலஸ் மானிட்டர்களின் விலை ரூ.8400 ஆக இருக்கலாம். மேலும் இவை இந்த அக்டோபர் மாதத்தில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot