எச்டியின் புதிய ஐபேட்

Posted By: Staff

எச்டியின் புதிய ஐபேட்
ஆப்பிள் நிறுவனம் ஐபேடின் புதிய வரவுகளை அறிமுகப்படுத்துவதில் மிகவும் குறியாக இருக்கிறது. புதிதாக வரும் ஐபேட் எச்டி குறிப்பாக அலுவலகர்களுக்கும் பத்திரிக்கைத் துறையில் இருப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

எச்டியின் புதிய ஐபேட் அகப் புற கேமராவுடன் உயர்ந்த தரத்தில் வீடியோ ரிக்கார்டிங் கொண்டு உலக அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

எச்டியின் புதிய ஐபேட் வீடியோ காலிங்கை சப்போர்ட் செய்யும் புற கேமராவைக் கொண்டிருக்கிறது. அது 3ஜியை சப்போர்ட் செய்து துல்லியமாக வீடியோ சாட்டிங் மற்றும் காலிங் செய்ய உதவும்.

ஐபேட் எச்டி 9.8 இன்ச் அளவுள்ள ஒரு பெரிய தொடுதிரை டிஸ்பிளேயைக் கொண்டுள்ளது. அதனுடைய டிவைஸ் ஐஒஎஸ் 5னால் இயங்கும் என எதிர்பார்க்கலாம்.

ஐபேட் எச்டி டாப்லட் பொழுதுபோக்கு அம்சங்களான எம்பி3, எம்பி4, டபுள்யுஎவி மற்றும் எஎசி+ போன்ற மீடியா பைல்களையும் கொண்டுள்ளது. தொடர்புக்காக அதன் டிவைஸ் எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் யுஎஸ்பி வசதியையும் கொண்டுள்ளது. அதேபோல் புற ஆடியோ தொடர்பிற்காக 3.5எம்எம் ஆடியோ ஜாக்கையும் கொண்டுள்ளது.

ஐபேட் எச்டி டாப்லடின் தொடுதிரை பயன்படுத்துவோருக்கு மிக எளிதாக இருக்கும். அதனுடைய மெமரி பழைய ஐபேடைப் போலவே சிறப்பான மெமரியைக் கொண்டிருக்கும். அதாவது 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி அளவுகளில் இருக்கும் என நம்பலாம்.

ஐபேட் எச்டில் இருக்கும் ஐஒஎஸ் ஸாப்ட்வேர் வீடியோ படங்களை சிறப்பான முறையில் எடிட் செய்யவும் வெளியிடவும் பயன்படும். மேலும் வைபை மற்றும் மிக விரைவான 3ஜி இன்டர்நெட் அக்சஸ் வசதியையும் வழங்குவதால் நாம் எங்கு சென்றாலும் இன்டர்நெட்டைப் பயன்படுத்த முடியும்.

ஐபேட் எச்டி ஐபேடின் விலை பற்றி இன்னும் தகவல்கள் தெரியவில்லை என்றாலும் இன்னும் 2 மாதத்திற்குள் சந்தைக்கு வந்துவிடும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot