புதிய 3ஜி டேப்லட்டினை வழங்கும் எச்சிஎல்!

எச்சிஎல் நிறுவனமும் ஒரு புதிய டேப்லட்டினை வெளியிட்டுள்ளது. தொழில் நுட்ப உலகில் வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்ற எச்சிஎல் நிறுவனம் மீ ஒய்-2 என்ற டேப்லட்டினை வெளியிட்டுள்ளது.
இன்று எலக்ட்ரனிக் சாதனங்களின் முக்கிய பயன்பாடு என்வென்றால், வைபை மற்றும் 3ஜி நெட்வொர்க் சவுகிரயங்கள் என்றஆகிவிட்டது. இப்படி இருக்கும் போது இந்த டேப்லட்டில் மட்டும் வைபை.
3ஜி போன்ற வசதிகள் இல்லாமல் போகுமா என்ன? இந்த ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்ததினை கொண்டதாகவும் இந்த இயங்குதளம் சிறப்பாக இயங்க 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும்
கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் கூறியது போல வைபை, 3ஜி மற்றும் புளூடூத் போன்ற வசதிகளை பயன்படுத்த 4,000 எம்ஏஎச் பேட்டரி வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உயர்ந்த தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்ய, நீண்ட ஆற்றலையம் இந்த மீ ஒய்-2 டேப்லட்டில் பெற முடியும்.
மீ ஒய்-2 டேப்லட்டில் நிறைய அப்ளிக்கேஷன்கள் ப்ரீலோடடு செய்யப்பட்டுள்ளது. ஹங்கமா அப்ளிக்கேஷன் இதில் உள்ளதால், நிறைய கேம்ஸ், மியூசிக் மற்றும் ரிங்டோன்களை எளிதாக டவுன்லோட் செய்யலாம். அதுவும் 3 மாதத்திற்கு மேலே கூறப்பட்டது போல் பாடல்களையும், ரிங்டோன்களையும் இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.
இந்த டேப்லட்டில் மெகா பிக்ஸல் கேமரா இருப்பதோடு, விஜிஏ முகப்பு கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளம் இதில் கொடுக்கப்பட்டுள்ளதால், வேண்டிய அப்ளிக்கேஷன்களை இதில் பயன்படுத்தலாம். உயர்ந்த தொழில் நுட்பங்களோடு சிறந்த படைப்பாக வாடிக்கையாளர்களு்ககு உருவாக்கப்பட்ட இந்த டேப்லட் ரூ. 14,999 விலையில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications