புதிய டேப்லட்டினை வழங்கும் எச்சிஎல்!

எச்சிஎல் நிறுவனத்தின் இந்த புதிய டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கும். இந்த இயங்குதளம் 1 ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸரினையும் கொண்டது. இந்த பிராசஸர், இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க துணை புரியும்.
ஒய்-2 டேப்லட்டில் உள்ள இந்த 7 இஞ்ச் தொடுதிரை வசதி 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் கொடுக்கும். மற்றும் இந்த டேப்லட்டில் 2 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் இந்த டேப்லட்டில் பெறலாம்.
எச்சிஎல் மீ ஆப்ஸ் ஸ்டோரில் இருந்து விரும்பிய அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்யலாம். இன்னும் முக்கியமாக இந்த டேப்லட் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்த ஒய்-2 டேப்லட் வைபை மற்றும் 3ஜி வசதிக்கு சிறப்பான முறையில் சப்போர்ட் செய்யும். இந்த தொழில் நுட்பங்களுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இதில் சிறந்த பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் 3,600 எம்ஏஎச் பேட்டரி சிறப்பான வகையில் செயல்படும்.சிம் ஸ்லாட்களை வழங்கும் எச்சிஎல் நிறுவனத்தின் இந்த புதிய ஒய்-2 டேப்லட் பற்றிய விலை விவரம் கூடிய விரைவில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications