தள்ளுபடியுடன் ஆன்லைனில் புதிய எச்சிஎல் டேப்லெட் விற்பனை!

Posted By: Karthikeyan
தள்ளுபடியுடன் ஆன்லைனில் புதிய எச்சிஎல் டேப்லெட் விற்பனை!

எச்சிஎல் நிறுவனம் தனது புதிய எச்சிஎல் எம்இ ஒய்2 டேப்லெட்டை தற்போது இந்தியவில் விற்பனைக்கு வைத்திருக்கிறது. இந்தியாவில் இருப்பவர்கள் snapdeal.com என்ற இணைய தளம் மூலம் இந்த டேப்லெட்டை வாங்கிக் கொள்ளலாம். இந்த டேப்லெட்டின் விலை ரூ.14,999 ஆகும். ஆனால் ஆன் லைன் மூலம் வாங்குவோருக்கு ரூ.1000 தள்ளுபடி செய்யப்படும்.

இந்த ஒய்2 டேப்லெட்டை இந்தியாவில் பெருமளவில் விற்றுத் தீர்த்துவிட வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டிருக்கிறது. அதன் திட்டம் நிறவேறுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த எச்சிஎல் டேப்லெட் பல நவீன தொழில் வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குவதால் இந்த டேப்லெட் மிக உறுதியாக இருக்கும். மேலும் இந்த டேப்லெட் 1ஜிஹெர்ட்ஸ் கோர்ட்டெக்ஸ் எ9 ப்ராசஸர் மற்றும் 1ஜிபி டிடிஆர்3 ரேம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இது அசூர வேகத்தில் இயங்கும் என்பதி்ல் ஐயமில்லை.

8ஜிபி மெமிரயுடன் வரும் இந்த லேப்ட்டின் மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி அளவுக்கு விரிவுபடுத்த முடியும். இந்த டேப்லெட்டின் 7 இன்ச் கப்பாசி்டடிவ் மல்டி டச் டிஸ்ப்ளை மிகத் துல்லியமாக இருக்கும்.

இந்த டேப்லெட் 2எம்பி பின்பக்க கேமரா மற்றும் 0.3எம்பி முகப்பு கேமரா ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் வீடியோ உரையாடல் மற்றும் போட்டோ எடுப்பதற்கு எந்தவித பிரச்சினையும் இருக்காது. அதோடு இந்த டேப்லெட் 1080பி எச்டி வீடியோ ப்ளேபேக்கையும் சப்போர்ட் செய்யும்.

இந்த டேப்லெட் ப்ளூடூத் மற்றும் மினி யுஎஸ்பி போன்ற இணைப்பு வசதிகளைக் கொண்டிப்பதால் மிக எளிதாக தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். அதோடு வீடியோ அவட்புட்டிற்காக மினி எச்டிஎம்ஐ போர்ட்டும் இந்த டேப்லெட்டி்ல உள்ளது. மேலும் இந்த டேப்லெட் 3ஜி வசதியையும் சப்போர்ட் செய்யும்.

இந்த ஒய்2 டேப்லெட்டில், எச்சிஎல் எம்இ ஸ்டோரிலிருந்து ஏராளமான அப்ளிகேசன்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இந்த டேப்லெட் இந்திய வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot