வீடியோ கேம் வசதியுடன் புதிய எச்சிஎல் டேப்லெட்!

Posted By: Karthikeyan
வீடியோ கேம் வசதியுடன் புதிய எச்சிஎல் டேப்லெட்!

ச்சிஎல் நிறுவனம் சமீபத்தில் எச்சிஎல் மி எக்ஸ்1 என்ற ஒரு புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஒரு மலிவு விலை டேப்லெட் ஆகும். இந்த டேப்லெட் பார்ப்பதற்கு பக்காவாக இருக்கிறது.

குறிப்பாக க்ரே நிறம் கொண்டு 480x800 பிக்சல் ரிசலூசனுடன் வரும் இந்த 7 இன்ச் டேப்லெட் பார்ப்போரின் மனங்களை எளிதில் கவர்ந்துவிடும். இதில் 2 எம்பி கொண்ட முகப்பு கேமரா இருக்கிறது. ஆனால் பின்பக்க கேமரா கிடையாது.

இந்த டேப்லெட் ஒரு மினி யுஎஸ்பி போர்ட், மினி எச்டிஎம்ஐ அவுட், ஹெட்போன் துவாரம், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் போன்ற இணைப்பு வசதிகளைக் கொண்டிருப்பதால் தகவல்களைப் பரிமாற்றம் செய்வது மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிப்பது போன்றவை சூப்பராக இருக்கும்.

இதன் எடை 391.5 கிராம் மட்டுமே. அதனால் இதை எடுத்துச் செல்வதும் மிக எளிதாக இருக்கும். இது பார்ப்பதற்கு ரிலையன்ஸ் 3ஜி டேப்பை ஒத்திருக்கிறது.

இந்த எச்சிஎல் டேப்லெட் ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீடு இயங்கு தளத்தைக் கொண்டிருந்தாலும் இதில் கூகுள் ப்ளே ஸ்டோர் இல்லாதது ஒரு சிறிய குறையே. அதற்கு பதிலாக இந்த டேப்லெட் எச்சிஎல் மி அப் ஸ்டோரைக் கொண்டிருக்கிறது.

அடுத்ததாக இந்த டேப்லெட் 1 ஜிஹெர்ட்ஸ் கோர்ட்டெக்ஸ் எ8 சிபியு மற்றும் 512 எம்பி கொண்ட ரேமையும் கொண்டுள்ளது. இதன் தொடுதிரையில் வீடியோ கேம்கள் விளையாடும் போது மிகவும் பரவசமாக இருக்கிறது. மேலும் வெப் ப்ரவ்சிங்கையும் இந்த டேப்லெட்டில் தடையின்றி செய்யலாம்.

இந்த டேப்லெட்டில் வீடியோ பிரமாதமாக இருக்கிறது. ஆனால் இதன் ஸ்பீக்கரில் இருந்து வரும் ஆடியோ மிகவும் மென்மையாக இருக்கிறது. இந்த டேப்லெட் 1080பி வீடியோ ப்ளேபேக்கை சப்போர்ட் செய்கிறது.

இந்த டேப்லெட்டில் இருக்கும் இன்னொரு முக்கிய விஷயம் அதில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள பைல் மேனேஜர் ஆகும். இந்த பைல் மேனேஜரை பயன்படுத்துவது மிக எளிதாக இருக்கிறது. மேலும் இது எபிகே இன்ஸ்டாலரைக் கொண்டிருப்பதால் புதிய அப்ளிகேசன்களை இந்த டேப்லெட்டில் இன்ஸ்டால் செய்வதோ அல்லது நீக்குவதோ மிக எளிதாக இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot