9.7 இஞ்ச் திரை கொண்ட டேப்லட்களின் ஒப்பீடு!

இயங்குதள விவரம்:
வேமி அதீனா டேப்லட் ஆன்ட்ராய்டின் லேட்டஸ்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்குவதாக இருக்கும். எச்சிஎல் ஆன்ட்ராய்டு 4.0.4 ஐஸ் கிரீம் ப்ளாட்பார்ம் வசதியினை கொண்டதாக இருக்கும். இந்த இரண்டு டேப்லட்களும் 9.7 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும்.
பிராசஸர்:
டேப்லட்களின் இயங்குதளம் சிறப்பாக இயங்க பிராசஸரும் ஒரு முக்கிய காரணம். இந்த டேப்லட்களில் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸர் மற்றும் குவாட் கோர் மெயில் 400 ஜிபியூ வசதியினை பெறலாம். ஆனால் வேமி அதீனா டேப்லட்டில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் சிப்செட்டும் எச்டிஎல் மீ ஜி-1 டேப்லட்டில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் சிப்செட்டும்
அளிக்கப்படும்.
கேமரா வசதி:
இந்த டேப்லட்டிற்கும் கேமரா வசதி மிக முக்கியம். இந்த 2 டேப்லட்களிலும் 2 மெகா பிக்ஸல் மெயின் கேமராவினை பெறாலம். எச்சிஎல் டேப்லட்டில் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும், வேமி அதீனா டேப்லட்டில் 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பெறலாம்.
தொழில் நுட்பங்கள்:
எச்சிஎல் மீ ஜி-1 டேப்லட் வைபை நெட்வொர்க், ப்ளூடூத்ஸ மினி எசிடிஎம்ஐ மற்றும் 3ஜி ஆகிய தொழில் நுட்ப வசதிகளை கொடுக்கும். வேமி அதீனா டேப்லட் வைபைஸ 3ஜி டோங்கில் ஆகிய தொழில் நுட்ப வசதிகளுக்கு சப்போர்ட் செய்யும்.
பேட்டரி:
மீ ஜி-1 டேப்லட்டில் 7,000 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரி மற்றும் வேமி அதீனா 8,000 எம்ஏஎச் லி்ததியம் அயான் பேட்டரியின் மூலம் 6 மணி நேரம் டாக் டைமினை பெறலாம்.
விலை விவரம்:
இந்த டேப்லட்களின் விலை பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கிறது. எச்சிஎல் மீ ஜி-1 டேப்லட் ரூ. 14,999 விலை கொண்டதாகவும், வேமி அதீனா டேப்லட் ரூ. 13,999
விலை கொண்டதாகவும் இருக்கும்.
இந்த செய்தியினை ஆங்கிலத்திலும் படிக்கலாம்.


Click it and Unblock the Notifications